நிறுவனம்:அம்/ திருக்கோவில் சகலகலை அம்மன் கோயில்

From நூலகம்
Name அம்/ திருக்கோவில் சகலகலை அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place திருக்கோவில்
Address திருக்கோவில், அம்பாறை
Telephone
Email
Website

ஶ்ரீ சகலகலையம்மன் ஆலயம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் வாக்கிரிசா வீதியில் அமைந்துள்ளது. இவ்வாலயம் வடக்கே பெரிய களப்பு வற்றாத நீர் நிலைகளையும், கிழக்கே வட்டி எனும் பெயர் பெற்ற நீர் சதுப்பு நிலங்களையும் தெற்கே விவசாய நிலங்களும் மேற்கே விளாவடி மற்றும் புதுக் குளத்தையும் வயல் சார்ந்த காணிகள் மற்றும் மேட்டு நிலப்பயிர்செய்கை நிலங்களையும் எல்லையாகக் கொண்டு கள்ளியந்தீவில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் பல ஆலயங்களுக்கு வரலாறுகள் மூலமும் கல்வெட்டு அத்தாட்சிகள் மூலமும், பண்டைகால அரசர்களின் ஆட்சிமுறைகள் மூலமும் அடையாளம் காணக்கூடியதாய் இருக்கிறது. ஆனால் கள்ளியந்தீவு சகலகலையம்மன் ஆலயத்திற்கு மாத்திரம் எந்தவொரு கல்வெட்டுகளோ சரித்திர சான்றுகளோ இல்லாததோர் ஆலயமாகும்.

அப்படி இல்லாத தன்மையே இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும். அவ்வூர் மக்களின் பக்தியினால் சரித்திர சான்றுகள் கொண்ட ஆலயங்களில் நடைபெறுகின்ற பூசைகளுக்கு நிகராக இவ்வாலய பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றது. ஆனி மாதத்தில் வரும் தசமி தினத்தன்று ஒரு நாள் பூசை சடங்குகள் முறையாக நடைபெற்று வந்தது.

ஆனால் பின் காலப்போக்கில் மூன்று நாட்கள் நடைபெற்று தற்போது ஆனி மாத தசமி தினத்தை உள்ளடக்கியவாறு ஐந்து பூசைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இந்த ஆலயத்தில் பெளர்ணமி தினத்தில் விஷேட பூசைகளும் நவராத்திரி தின விழாவும் கேதாரகெளரி விரத பூசைகளும் நடைபெற்று வருகின்றன.