நிறுவனம்:அம்/ குருந்தையடி ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயம்

From நூலகம்
Name குருந்தையடி ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place கல்முனை
Address குருந்தையடி ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், கல்முனை, அம்பாறை
Telephone -
Email -
Website -


குருந்தையடி ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் குருந்தையடியில் அமைந்துள்ளது. இவ்வூர் மக்கள் இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் குருந்தை மரத்தின் கீழ் இவ்வாலயத்தை உருவாக்கினர்.

ஆரம்பத்தில் அங்கு குடியிருந்த சிலரால் ஒரு சிறிய விநாயகர் சிலை மர நிழலில் வைத்து வழிபாடு செய்யப்பட்டுள்ளது. நாளடைவில் இவ்விநாயகரின் சக்தி பற்றி இப் பிரதேசமெங்கும் பேசப்பட்டது. இதனால் மக்கள் பெருமளவில் இங்கு வருகைத் தரத்தொடங்கினர்.

மர நிழலில் இருந்து அருள் பாலிக்கும் விநாயகப் பெருமானுக்கு நிரந்தர கட்டிடமொன்றை அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் விரும்பினர். அருகாமையில் இருந்த கட்டிடத் திணைக்கள அலுவலகத்தை அணுகி அதிகாரிகளிடம் விருப்பத்தை தெரிவித்தனர். கட்டிடத் திணைக்கள அதிகாரிகளின் சம்மதத்துடன் அவர்களின் நிதி உதவியுடனும் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆலய நிர்மாணத்திற்கு பொதுமக்களும் நீர்ப்பாசன திணைக்கள ஊழியர்களும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களும் பெருமனதுடன் நிதி உதவி செய்தனர். இதனால் ஆலயம் அழகுற அமைக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் 1982ல் வெகு விமர்சையாக நடாத்தப்பட்டது. வருடாந்த உற்சவம் பங்குனி உத்தரத்தில் இடம்பெறுகிறது.

கேட்கும் செல்வத்தை வாரி வழங்கும் வல்லமை கொண்ட விநாயகர் அமைந்திருக்கும் இவ்வாலயம் குருந்தையடி செல்வ விநாயகர் ஆலயம் என மக்களால் அழைக்கப்படுகின்றது. இதன் பின்னர் 2012ம் ஆண்டு கும்பாபிஷேகம் வருடாந்த அலங்கார உற்சவமும் நடைபெற்றது.