நிறுவனம்:அம்/ காரைதீவு அருள்மிகு பாலையடி வால விக்கினேஸ்வரர் ஆலயம்

From நூலகம்
Name காரைதீவு அருள்மிகு பாலையடி வால விக்கினேஸ்வரர் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place காரைதீவு
Address காரைதீவு, அம்பாறை
Telephone -
Email -
Website -


ஶ்ரீ பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் எட்டாம் பிரிவில் கடற்கரையை அண்டியதாக கிழக்கு மற்றும் தெற்கு இராஜ கோபுரங்களுடன் அமைந்துள்ளது. 1815ம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கை முழுவதையும் தம் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்த காலப்பகுதியில் ஆங்கில நாட்டு ஓகிறேடி என்பவர் தன்னாட்டிற்கு வருமானத்தை தேடிக்கொள்ளும் பொருட்டு தென்னையை பயிரிட்டு அதன் மூலம் வருமானம் தேட விரும்பினார்.

இவர் தென்பகுதியில் அமைந்துள்ள 250 ஏக்கர் காடாக கிடந்த காணியை துப்பரவு செய்து தென்னை நாட்ட அவ்விடத்தை காடழிப்புக்கு உள்ளாக்கினார். அக்காட்டிலே மிகப்பழமையான பெரிய பாலை மரத்தை வெட்டியவர்கள் உடலியல் ரீதியாக பல உபாதைகளை அவ்விடத்திலேயே அனுபவித்தனர். இருந்தாலும் மரம் வெட்டப்பட்டது. அதன் பொந்தில் செதுக்கப்படாத பிள்ளையார் அமைப்பைக் கொண்டு விக்கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்விடயம் அறிந்த ஓகிறேடி தனது பெரிய கங்காணியான பொன்னம்பலத்திடம் இவ்விடத்தில் ஆலயம் அமைத்து வழிபாடு செய்யலாம் எனத் தெரிவித்தார். அதன் பின்னர் பாலைமரப் பொந்தில் பிள்ளையார் அமைந்திருந்தமையினால் பாலையடி வால விக்கினேஸ்வரர் என பெயர் உண்டாகிற்று. இவ்வாலயத்தின் முதலாவது மகா கும்பாபிஷேகம் 1904ம் ஆண்டு நடைபெற்றது.

அதனைத் தொடந்து 1944ம் ஆண்டு கிரகக் கோயில்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1978ம் ஆண்டு சூறாவளியாலும் 1985ம் ஆண்டு இனக்கலவரத்தினாலும் 2004ம் ஆண்டு சுனாமியாலும் தாக்கப்பட்டது. இருப்பினும் சந்தனத்தாரின் உதவியோடும் அரசாங்கத்தின் உதவியோடும் திருத்தியமைக்கப்பட்டு வழிபாட்டுத் தலமாக கொள்ளப்பட்டது.