நிறுவனம்:அம்/ கல்முனை ஶ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலயம்

From நூலகம்
Name கல்முனை ஶ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place கல்முனை
Address கல்முனை ஶ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலயம், கல்முனை, அம்பாறை
Telephone -
Email -
Website -


சந்தான ஈஸ்வரர் ஆலயம் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ளது. இற்றைக்கு எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் இவ்வாலயம் அமைந்துள்ள இடத்தில் காணப்பட்ட தாமரைத் தடாகத்தின் அருகே யாழ்ப்பாண வர்த்தகர்கள் சிலர் ஒன்று கூடி தமக்கென அருள்பெற ஓர் ஆலயம் வேண்டுமெனத் தீர்மானித்து இவ்வாலயத்தை அமைத்தனரென அறியப்படுகிறது.

சந்தாங்கேணிக் குளத்தினருகே இவ்வாலயத்தை அமைப்பதில் தலைமை தாங்கி உழைத்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் அருணாச்சலம் முதலியார் (ஆனாமூனா) என்பவராவார். இவ்வாலயத்தில் ஆரம்பத்தில் இறைவனின் பாவனையாக ஒரு கருங்கல்லை வைத்து வழிபட்டு வரும் போது இதற்கு சந்தான ஈஸ்வரர் என்ற நாமத்தையும் சூட்டினர்.

வருடந்தோறும் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை பத்துத்தினங்களும் விசேட பூசைகள் நடாத்தப்பட்டு வரும்வேளையில் 1978ல் வீசிய சூறாவளியினால் ஆலயம் பலத்த சேதத்திற்குள்ளாகியது. தல விருட்சமாகவும் தலத்திற்கு அழகூட்டியும் ஓங்கி வளர்ந்திருந்த பெரிய ஆலமரம் அடியோடு சாய்ந்து விழுந்தது. இவ் அழிவுகளால் மனம் சோர்ந்து போகாத பக்தர்கள் மீண்டும் அருணாச்சலம் முதலியார் தலைமையில் ஒன்று கூடி ஆகம விதிப்படி ஆலயத்தை புனருத்தாரணம் செய்தனர்.

1980ம் ஆண்டு மூலமூர்த்தியுடன் விநாயகர், நாகலிங்கேசுவரர், அம்பிகை, ரிஷபம், பலிபீடம், வைரவர் ஆகிய விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்து குடமுழுக்குச் செய்யப்பட்டது. அருணாச்சலம் முதலியார் முதிர்ச்சியடைந்த வேளையில் ஆலயத்தில் தலைமைப் பொறுப்பை அனைவரினதும் விருப்புடன் பிரபல்யமான வர்த்தகர் பிள்ளையினார் வேலாயுதப்பிள்ளை என்பவரிடம் ஒப்படைத்து விட்டு யாழ்ப்பாணம் சென்று விட்டார்.

வேலாயுதப்பிள்ளை அவர்களின் தலைமையின் கீழ் ஆலய அபிவிருத்திப் பணிகள் தடையின்றி நடைபெற்றதுடன் ஆலயம் புதுப்பொலிவும் பெற்றது. வருடாந்த உற்சவமும் விஷேட உற்சவங்களும் தடையின்றி இடம்பெற்று வருகின்றன. தேர்த்திருவிழாவுடன் கூடிய வருடாந்த உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பிப்பர்.

தேர்த்திருவிழாவின் மறுநாள் தீர்த்தோற்சவம் வருடாந்த பங்குனி உத்தரத்தில் நடைபெறும். ஆலயத்தின் முன் முகப்பில் சிவபெருமானின் உருவச்சிலை அமைக்கப்பட்டு அத்தோடு உள்ளே பெரிய நந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.