சர்ப்ப வியூகம்

From நூலகம்
சர்ப்ப வியூகம்
967.JPG
Noolaham No. 967
Author செம்பியன் செல்வன்
Category தமிழ்ச் சிறுகதைகள்
Language தமிழ்
Publisher யாழ் இலக்கிய வட்டம்
Edition 2002
Pages xii + 224

To Read

நூல்விபரம்

யாழ். இலக்கிய வட்டத்தின் தாபகச் செயலாளராகவும் இலங்கை இலக்கியப் பேரவையின் செயலாளராகவும், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் இயங்குவதுடன் யாழ் கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றும் செம்பியன்செல்வன், ஈழத்து இலக்கியத்துக்கு நன்கு அறிமுகமானவர். நாவல், நாடகம், சிறுகதை, உருவகம், திரைப்படம், ஆன்மீகம், ஊடகவியல், மேடைப்பேச்சு என்று பல்துறையிலும் ஈடுபாடு கொண்டவர். சர்்ப்பவியூகம் இவரின் சிறுகதை படைப்பனுபவத்தினை நன்கு புலப்படுத்துகின்றது. தக்கதொரு விமர்சகராக இனம்காணப்படும் செம்பியன்செல்வனின் படைப்புக்களில் மிக்க அவதானிப்பும் முரண்படாத பாத்திரவளர்ப்பும் சமூக எதிர்வு நோக்கலும் கலைத்துவமாக அமைந்துள்ளன.


பதிப்பு விபரம்
சர்ப்பவியூகம். செம்பியன் செல்வன். (இயற்பெயர்: ஆறுமுகம் இராஜகோபால்). யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஜுலை 2002. (யாழ்ப்பாணம்: பொஸ்கோ நிறக்கலைப்பதிப்பகம், நல்லூர்). xii + 224 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250. அளவு: 20.5 *15 சமீ.


-நூல் தேட்டம் (# 1627)