கவிதைக் கதம்பம்

From நூலகம்
கவிதைக் கதம்பம்
550.JPG
Noolaham No. 550
Author சொக்கலிங்கம், கந்தசாமிச்செட்டி
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher சொக்கன் எழுத்துப் பணியின்
வெள்ளி விழாக் குழு வெளியீடு
Edition 1974
Pages xii + 42

To Read


நூல்விபரம்

1944ஆம் ஆண்டுமுதல் எழுதத் தொடங்கியுள்ள சொக்கன் அவர்களின் முதற்கவிதைத் தொகுதியான வீரத்தாய் பருத்தித்துறை கலாபவன அச்சக வெளியீடாக 5.9.1958இல் பிரசுரமாயிற்று. இவரது முதல் நூலும் இதுவேயாகும். அன்றுதொடக்கம் தொடர்ந்து எழுத்துலகில் தடம்பதித்து வந்த சொக்கனின் வெள்ளிவிழா நினைவாக இக்கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. தெய்வீகம், தத்துவம், மொழி, இலக்கியம், சமூகம், மானிடம் ஆகியன பற்றிப் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர் பாடிய கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அமரர் சொக்கனின் வாழ்வியல் பணிகள் பற்றிய பல்வேறு குறிப்புகளும் இத்தொகுதியில் செறிந்து காணக்கிடைக்கின்றன. அவரது வாழ்வும் பணியும் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளவிருப்பவர்களுக்கு சொக்கனின் இலக்கிய வாழ்வின் முதல் 25 ஆண்டுகளைப் பற்றிய தகவல்களை இந்நூலில் நிறையவே பெற்றுக்கொள்ளலாம்.


பதிப்பு விபரம்
கவிதைக் கதம்பம். சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). யாழ்ப்பாணம்: சொக்கன் எழுத்துப் பணியின் வெள்ளிவிழாக் குழு வெளியீடு, நாயன்மார்கட்டு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1974. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 432 காங்கேசன்துறை வீதி). xii + 42 பக்கம், விலை: ரூபா 2., அளவு: 18.5 * 12 சமீ.

-நூல் தேட்டம் (# 3437)

Contents

  • காணிக்கை
  • அணிந்துரைகள்
    • வே. சிவக்கொழுந்து
    • பண்டிதர் சோ. இளமுருகனார்
    • வித்துவான் க. வேந்தனார்
    • பண்டிதர் ச. இராமச்சந்திரன்
    • பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
    • புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
    • திரு கு. முத்துக்குமாரசாமிப்பிள்ளை
    • பண்டிதர் வ. நடராஜன்
    • திரு மு. ஞானப்பிரகாசம்
    • திரு கி. லஷ்மணன்
    • பண்டிதர் க. செல்லத்துரை
    • திரு. ம. ஶ்ரீகாந்தா
    • கலாநிதி க. செ. நடராஜன்
    • இரசிகமணி கனக செந்திநாதன்
    • கலாநிதி ச. தனஞ்சயராசசிங்கம்
    • கலாநிதி க. கைலாசபதி
    • டாக்டர் ந. சுப்பிரமணியம்
  • முகவுரை – க. சொக்கலிங்கம்
  • பதிப்புரை
  • தெய்வீகம்
  • தத்துவம்
  • மொழி
  • இலக்கியம்
  • சமூகம்
  • மானிடம்