உரத்துப் பேச...

From நூலகம்
உரத்துப் பேச...
176.JPG
Noolaham No. 176
Author ஆழியாள்
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher மறு
Edition 2000
Pages 72

To Read

Book Description

திருக்கோணமலையில் பிறந்து மூதூர் மாவட்டத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று மதுரை மீனாட்சிக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றுள்ள ஆழியாள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராகவிருந்து பின்னர் அவுஸ்திரேலியாவில் முதுகலைமாணிப்பட்டத்திற்காகத் தன் ஆய்வைத் தொடர்பவர். இந்நூல் இவரின் முதல் கவிதைத்தொகுதி. ஆழியாளின் கவிதைகள் நுண்ணிய உணர்திறனையும் கவிதையாக் கலையும், கருத்துநிலைச் செம்மையினையும் தன்னளவில் கண்டு வெளிப் படுத்துவன. ஓவ்வொரு கவிதை வழியாகவும் விரியும் வெளி நமக்குள் ஏற்படுத்தும் அர்த்தப் புரிதல்கள் ஏராளம். அவை பன்முகத் தன்மை கொண்டவை. இக்கவிதைத் தொகுதியின் இறுதியில் மொழிவழிச் செலவும் இருப்பின் அடையாளக் குறிப்புகளும் என்ற தெ.மதுசூதனனின் கட்டுரையும் இடம்பெறுகின்றது.


பதிப்பு விபரம்

உரத்துப் பேச. ஆழியாள்; (இயற்பெயர்: மதுபாஷினி). சென்னை 6000020: மறு, 71, முதலாவது பிரதான சாலை, இந்திராநகர், 1வது பதிப்பு, ஜுலை 2000. (சென்னை 6000014: தி பார்க்கர், 293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை). 72 பக்கம், விலை: இந்திய ரூபா 35. அளவு: 21ஒ14 சமீ.