ஆளுமை:முஹம்மது ஹிபிஷி, முஹம்மது தெளபீக்

From நூலகம்
Name முஹம்மது ஹிபிஷி
Pages முஹம்மது தௌபீக்
Birth 1955.11.30
Place மாத்தறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மது ஹிபிஷி, முஹம்மது தெளபீக் (1955.11.30 - ) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் முஹம்மத் ஹிபிஷி, எம். ரீ. எம், ஹிபிஷி, பறக்கும் தேனீ, ஓடும் மேகம் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், செய்திக் கட்டுரைகள், தொகுப்புக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். மாத்தறை அந்நூர் முஸ்லீம் மகா வித்தியாலயம், மாத்தறை அறபா தேசிய கல்லூரி ஆகியவற்றில் கற்றார்.

இவரது முதலாவது ஆக்கமான றழழான் விருந்து 1977 இல் தினகரனில் பிரசுரமானது. தொடர்ந்து 20 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், செய்திக் கட்டுரைகள், தொகுப்புக் கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியதுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம்சேவை, தமிழ் சேவை ஆகியவற்றிலும் ஒலிபரப்பாகியுள்ளன. மனிதநேயர் பாக்கீர் மாக்கார் என்னும் தலைப்பில் இவரால் எழுதப்பட்ட கட்டுரை அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார்.


Resources

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 39-40

வெளி இணைப்புக்கள்