ஆளுமை:ஸ்ரீரஞ்சனி, விஜேந்திரா

From நூலகம்
Name ஸ்ரீரஞ்சனி, விஜேந்திரா
Pages சுப்பிரமணியம்
Pages சிவஞானசுந்தரி
Birth 1960.02.25
Place தெல்லிப்பளை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸ்ரீரஞ்சனி, விஜேந்திரா (1960.02.25 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் சிவஞானசுந்தரி. தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவி ஆவார். தனது பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்து கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ற் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்தார். தற்போது ரொரோன்றோ கல்விச் சபையின் ஒரு தமிழ் ஆசிரியராகவும், சட்டம், மருத்துவம் போன்றவற்றுடன் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கான ஒரு தமிழ்மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றுகின்றார்.

ஈழநாடு பத்திரிகையில் ஏப்ரல் 1984 இல் பிரசுரமான ‘மனக் கோலம்’ சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்த இவரது, முதலாவது சிறுகதைத் தொகுதியான “நான் நிழலானால்”, 2010 இல் வெளிவந்தள்ளது. அத்துடன், மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டுக்கு சமர்ப்பணமாக, தமிழ் படிப்போம் பகுதி 1 & பகுதி 2 எனப்படும் தமிழ் பயிற்சிப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். தினக்குரல், மல்லிகை, ஞானம், ஜீவநதி, யுகமாயினி, வல்லினம், எதுவரை, காற்றுவெளி, கனடா உதயன், வைகறை, தூறல் உள்ளடங்கலான பல பத்திரிகைகள்,சஞ்சிகைகள் மற்றும் இணையத் தளங்களில் இவரது சிறுகதைகள், கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.