ஆளுமை:ஷம்ஸ், எம். எச். எம்.

From நூலகம்
Name ஷம்ஸ், எம். எச். எம்.
Birth 1940.03.17
Pages 2002.07.15
Place மாத்தறை
Category எழுத்தாளர், ஊடகவியலாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஷம்ஸ், எம். எச், எம். (1940.03.17 - 2002.07.15) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், கவிஞர். இலங்கை ஆசிரியர் சேவையில் சேர்ந்த இவர், பல உயர்நிலைக் கல்லூரிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றி, இறுதியாக மதுராபுரி அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலையில் தமிழாசிரியராக இருந்து 1992 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பின்னர் 1994 இல் தினகரன் நாளேட்டில் ஆசிரியர் பீடத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

எழுத்துலகில் நீள்கரை வெய்யோன், வல்லையூர் செல்வன், அபூபாஹிம், அஷ்ஷம்ஸ், பாஹிறா, ஷானாஸ் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், நாவல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், உருவகக்கதைகள், பாடல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டிருந்த இவர், இன்றைய ஈழத்துப் புதுக்கவிதைகள், ஹைக்கூ எழுதுவது எப்படி, மாத்தளை காசிம் புலவர், தென்னிலங்கை இலக்கிய வளர்ச்சி முதலான நூல்களை ஆக்கியுள்ளார்.

இவர் அறிவுத் தாரகை விருது, உண்டா (ஒலிபரப்புத் துறைக்கான விருது), சமாதான விருது, இலக்கிய விருது, பல்கலை வித்தகர், சமாதான விருது, சாகித்திய விருது, இசைப்பாடல் துறைக்கான விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 56-64
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 106-109
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 85-87