ஆளுமை:ஷமீலா, இஸ்மத்

From நூலகம்
Name ஷமீலா
Pages இஸ்மத்
Pages இஸ்ஸதுல் ஸருபா
Birth 1970.06.12
Place கொழும்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஷமீலா, இஸ்மத் (1970.06.12) கொழும்பில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை இஸ்மத்; தாய் இஸ்மத்துள் ஸரூபா. கொழும்பு கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் கொன்வென்டில் உயர்தரம் வரை கல்வி கற்றார். பாடசாலை படிக்கும் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். இவரது கணவர் எம்.எஸ்.எம்.ரிஸான் எழுத்துறையைச் சேர்ந்தவர். புகைப்படக் கலைஞர் அல்ஹாஜ் பி.எம்.சலாஹீதீன் அவர்களே இவரை எழுத்துலகிற்கு அறிமுகம் செய்துள்ளார் என்பதை நன்றியுடன் நினைவுகூருகிறார் ஷமீலா. இவரது இஸ்லாமிய ஆக்கங்கள் தான் பத்திரிகைகளில் முதன் முதலில் வெளிவந்தன. சிறுகதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள் எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர் ஷமீலா. இவரின் ஆக்கங்களுக்கு முதலில் தளம் அமைத்துக்கொடுத்தது தினகரன் பத்திரிகையே. இதனைத் தொடர்ந்து தினமணி, மித்திரன், நவமணி, தினத்தந்தி, ஜனனி, சூடாமணி போன்ற நாளிதழில்களிலும் ஒளி அரசி சஞ்சிகையில் தொடர்ந்தும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. திருகோணமலை இலக்கிய ஒன்றியம் வெளியிட்ட சிறுகதைத் தொகுதியிலும் இவரது கதைகள் பிரசுரமாகியுள்ளன. இளமை எனும் பூங்காற்று எனும் சிறுகதைத் தொகுதி இவரது முதலாவது நூல். வான்மதிக் கவிதைகள் எனும் கவிதைத் தொகுதி இவரது இரண்டாவது நூலாகும்.

விருதுகள்

இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் தேசமான்ய என்னும் விருது பெற்றுள்ளார்.


வெளி இணைப்புக்கள்