ஆளுமை:வைத்தியலிங்கம், சி.

From நூலகம்
Name வைத்தியலிங்கம்
Birth 1911
Pages 1991.05.25
Place ஏழாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைத்தியலிங்கம், சி. (1911 - 1991.05.25) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ரவீந்திரன் என்னும் புனைபெயரால் அறியப்பட்டார். 1930களிலிருந்து சிறுகதைகளை எழுதத் தொடங்கிய இவர், 25 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் பராசக்தி, நெடுவழி, மூன்றாம் பிறை, பாற்கஞ்சி, ஏன் சிரித்தார், என் காதல், பைத்தியக்காரி, பார்வதி, பிச்சைக்காரர், உள்ளப்பெருக்கு, டிங்கிரி மெனிக்கா உட்படப் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். மேலும் இவரது சிறுகதைகள் தொகுப்பு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. 1990 இல் வெளிவந்த கங்காகீதம் ஒரு சிறுகதை தொகுப்பு நூலாகும்.

இவர் ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வல்லவர். இவரது சிறுகதைகளில் தமிழக எழுத்தாளர் கு. ப. . ராஜகோபாலின் சாயல்கள் காணப்படுகின்றது. தூய தமிழ்நடையைச் சிறுகதைகளில் பயன்படுத்தியுள்ளார். ரஷ்ய இலக்கிய மேதை இவான் துர்க்கனிவ்வின் On the Eve என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். இவர் சிறுகதை எழுத்தாளர் இலங்கையர்கோனின் உறவினராவார்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 300 பக்கங்கள் 48-50
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 373-374
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 49
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 19-22