ஆளுமை:வீரகத்தி, கந்தர்

From நூலகம்
Name வீரகத்தி
Pages கந்தர்
Pages சின்னப்பிள்ளை
Birth 1922.10.04
Place கரவெட்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வீரகத்தி, கந்தர் (1922.10.04 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தர்; தாய் சின்னப்பிள்ளை. இவர் மாவை வெண்ணெய்க் கண்ணார், கார்த்திகேசு, கந்தமுருகேசனார் போன்றோரிடம் கல்வி கற்றார். இவர் மாணவர் மரபு, இலக்கண முயற்சிகள், இலக்கிய முயற்சிகள், பத்திரிகைப் பணி, உரை முயற்சிகள் என பல பணிகளைத் தமிழுக்கு ஆற்றியுள்ளார். இவரது இலக்கியப் பணி மின்மினி என்ற சஞ்சிகையில் எழுதியதிலிருந்து ஆரம்பமானது.

இவர் இலங்கையிலும் இந்தியாவிலும் வெளிவந்த பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் நாகம்மைவண்ணன், குருவி, தமிழ் நாடன், கல்லாடன், லெனின், காளிதாசன் போன்ற பல புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் கிருதயுகப் புதுமலர்ச்சி, ஓருலகம், கண்ணிற் காக்கும் காவலன், இலக்கிய இருபது, அபிராமி நவநீதம், ஈழத்துக் கருகம்பனையூர் இராச இராசேஸ்வரி, ஊரெழு சிவபூரணி கவிதாஞ்சலி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். மேலும் பல்வேறு முருகன் தலங்கள் மீது பாடிய பாடல்களைச் செழுங்கமலச் சிலம்பொலி ஆக வெளியிட்டார்.

இவரது திறமைக்காகத் தமிழ் இலக்கணத்திற்கு ஒரு நியூட்டன், இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு, 1967 ஆம் ஆண்டு ஜப்பான் ரோக்கியோ நகரில் நடைபெற்ற அகில உலக வானொலிப் போட்டியில் பாராட்டு, பரிசில் போன்றன கிடைக்கப்பெற்றுள்ளன.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 49-50
  • நூலக எண்: 11850 பக்கங்கள் 75-77