ஆளுமை:விஜயபாஸ்கர், வைத்திலிங்கம்

From நூலகம்
Name விஜயபாஸ்கர்
Pages வைத்திலிங்கம்
Birth 1966.10.18
Place அளவெட்டி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஜயபாஸ்கர், வைத்திலிங்கம் (1966.10.18 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வைத்திலிங்கம். இவர் இ. பாலசுந்தரம், கணபதிப்பிள்ளை, ப. நற்குணம், என். செல்வராசா, செல்வரட்ணம், உருத்திராபதி ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்றார்.

இவர் பூதத்தம்பி, சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, வள்ளி திருமணம், கோவலன் கண்ணகி, பவளக்கொடி ஆகிய நாடகங்களில் நடித்துள்ளதுடன் யாழ்ப்பாணம் மகாஜனாக் கல்லூரி ஆசிரியராகவும் யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியல் கழக உப தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்தினால் கலைஞர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 221