ஆளுமை:விசாகப்பெருமாள், விஸ்வலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விசாகப்பெருமாள் விஸ்வலிங்கம்
தந்தை விஸ்வலிங்கம்
தாய் தெய்வானைப்பிள்ளை
பிறப்பு 1931.01.14
இறப்பு 2012.08.02
ஊர் திருக்கோணமலை
வகை சமய, சமூக பொது தொண்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இவர் திருக்கோணமலையில் வாழ்ந்த சமய, சமூக பொது தொண்டாளர். 14.01.1931ம் ஆண்டு யாழ்ப்பாணம், புன்னாலைக் கட்டுவனில் விஸ்வலிங்கம், தெய்வானைப்பிள்ளை ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு அமரர். வி. சிவஞானம், அமரர். பூதப்பிள்ளை, அமரர். நாகரெத்தினம், அமரர். சரஸ்வதி ஆகியோர் சகோதரர்கள் ஆவார்கள். புன்னாலைக்கட்டுவன் ஆங்கிலப் பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும், பின்னர் யாழ். மத்திய கல்லூரியில் உயர்கல்வியையும், கற்றுத்தேர்ந்தார்.

கல்வியை முடித்த பின் இவரின் தமயனார் திரு. வி. சிவஞானம் அவர்களினதும், ஒன்று விட்ட தமயனார் திரு. செ. வைத்தியலிங்கம் அவர்களினது உதவியினாலும், திருக்கோணமலைக்கு வந்து நீர்பாசன இலாக்காவில் வேலை செய்தார். அதன் பின்னர் DR. S. சிவானந்தம் நகராட்சி மன்ற தலைவராக இருந்த காலத்தில் சோலைவரி அறவிடும் உத்தியோகத்தராக கடமை ஏற்றார். வருமானப் பற்றாக்குறை காரணமாக பிரபல வர்த்தகர் திரு. சம்பந்தர் அவர்களின் பெற்றோல் நிரப்பும் நிலையத்தை குத்தகைக்கு எடுத்து நடாத்தினார்.

இவர் சிறந்த இறை பக்தியும், அடியார்களை போற்றும் தன்மையும் கொண்டவர். சமய வளர்ச்சிக்காக திருக்கோணமலையில் அயராது உழைத்தவர். குறிப்பாக சமாது பிள்ளையார் கோயில் ஆலயத்திற்கு மணிகோபுரம் அமைத்துக் கொடுக்க பெரும்பாடு பட்டார். ஆலயங்களுக்கு உதவி வழங்குவதிலும், உதவியினை தேடி கொடுப்பதிலும் பாரிய தொண்டாற்றினார். சிவன் கோவில், முத்துக்குமாரசுவாமி கோயில், கண்ணகி அம்மன் கோயில் என்பவற்றிற்கு வருடாந்த உபாயம் செய்து வந்த ஒருவராவார். இவர் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தொண்டராக பணியாற்றி அரசியல் களத்திலும் முன் நின்றார்.

1965ம் ஆண்டு சுப்பிரமணியம் தனலெட்சுமி என்னும் ஆசிரியையை திருமணம் செய்து கொண்டார். சாதாரண ஆசிரியராக இருந்த மனைவியை பயிற்சி ஆசிரியராக பதவி உயர்வு பெற ஆவண செய்தார். இல்லறத்தின் பயனாக சுமதி, பாலமுரளி, பாமதி, பாலகுமரன் என நான்கு பிள்ளைகளை பெற்று வளர்த்து கல்வியறிவை ஊட்டினார். திருமதி. தனலட்சுமி அவர்கள் கல்வி கற்பிப்பதில் காட்டிய ஆர்வம், அவரை பகுதித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வடைய வைத்தது.

நோயின் தாக்கம் அதிகரிக்க 02.08.2012 அதிகாலை 5.30 மணிக்கு இறையடி சேர்ந்தார்.