ஆளுமை:வரதராணி ஹெமரஸ்சியா, இப்னு அஸமத்

From நூலகம்
Name வரதராணி ஹெமரன்சியா
Pages சுப்பையா லாசரஸ்
Pages மரியசந்தனம்
Birth 1966.11.28
Place கொழும்பு
Category எழுத்தாளர், ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வரதராணி ஹெமரஸ்சியா, இப்னு அஸமத் கொழும்பில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பையா லாசர்ஸ்; தாய் மரியசந்தனம். ஆரம்பக் கல்வியை தெமட்டகொடை தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை கொழும்பு கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் கல்லூரியிலும் உயர் நிலைக் கல்வியை அல் ஹிக்மா கல்லூரியிலும் கல்வி கற்றார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஊடக டிப்ளோமா முடித்துள்ளார்.

1985ஆம் ஆண்டு எழுத்துத் துறையில் பிரவேசித்துள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், ஆய்வுக் கட்டுரை எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் எழுத்தாளர். இவரின் ஆக்கங்கள் சிந்தாமணி, தினகரன், வீரகேசரி ஆகிய நாளிதழ்களிலும் ஞானம், மல்லிகை போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இலங்கை வானொலியின் சிறுவர் மலரின் ஊடாக ஊடகத்துறையில் பிரவேசித்துள்ளார். 1997ஆம் ஆண்டு வானம்பாடி சேவையின் ஊடாக தொண்டர் அடிப்படையில் அறிவிப்பாளராக இலங்கை வானொலியில் இணைந்து கொண்டுள்ளார். 2000ஆம் ஆண்டு வர்த்தக சேவையில் பகுதி நேர அறிப்பாளராகவும் உரைச்சித்திர நாடகக் கலைஞராகவும் இணைந்துக் கொண்டுள்ளார். வானம்பாடி சேவை, வர்த்தகசேவை, கொழும்பு சர்வதேச ஒலிபரப்பிலும் அறிவிப்பாளராக கடமையாற்றியுள்ளார். 2015ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் இலங்கை ஒலிப்புக்கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவையிலும், தென்றல் பன்பலை சேவையிலும் அறிவிப்பாளராக கடமையாற்றி வருகிறார். 1997ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியை நீண்டகாலம் செய்துள்ளார். எதிரொலி என்னும் அரசியல் நிகழ்ச்சியையும் இவர் செய்துள்ளமை விசேட அம்சமாகும்.

கண்ணுக்கு உயிர் வந்தால் என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய நிம்மதியைத் தேடி என்ற நாவல் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்துள்ளது. வலம்புரி கவிதாவட்டத்தின் பொருளாளராகவும் உள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு வரதராணி ஹெமரஸ்சியா, இப்னு அஸமத் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.


Resources

  • நூலக எண்: 664 பக்கங்கள் {{{2}}}


வெளி இணைப்புக்கள்