ஆளுமை:வனிதா, தவராசா

From நூலகம்
Name வனிதா
Pages தவராசா
Pages செல்வமணி
Birth 1993.05.02
Place கிளிநொச்சி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வனிதா, தவராசா (1993.05.02 - ) பச்சிலை பிரதேசம், பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை தவராசா; தாய் செல்வமணி. இவர் சிறு வயது தொடக்கம் கவிதை கட்டுரை சிறுகதை ஆகியவற்றில் அதீத ஈடுபாடு உடையவராக திகழ்கிறார். இவர் 2004 ம் ஆண்டு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் நடாத்திய முதியோர் தின நிகழ்வில் மூத்தோர் எங்கள் முத்து எனும் தலைப்பில் கவிதையானது முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இந்நிகழ்வானது தொடர்ந்து இவரை கவிதஎழுததூண்டியதாக குறிப்பிடுகின்றார். பாடசாலை மட்டுமல்லாது பிரதேச செயலகமும் தனது வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது எனக்கூறும் இவரின் படைப்புகள் தேசிய மட்டத்தில் பிடித்து ள்ளதையும் குறிப்பிடுகின்றார்.

2011 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் சிரேஷ்ட பிரிவில் இவரது குற்றுயிர்க்கு முற்றுப்புள்ளி எனும் கவிதை இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தை இவருக்கு பெற்றுக்கொடுத்தது. இந்நிகழ்வானது பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு மட்டுமன்றி கிளிநொச்சி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பிரதேசசெயலகத்தாலும் மாவட்ட மகளிர் அமைப்பாலும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவிலும் பாராட்டி பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இளம் படைப்பாளிகளின் கைகளின் வேகத்தை எதிர்பார்க்கும் பச்சிலைப்பள்ளி பிரதேச கலை வரலாற்றில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது.