ஆளுமை:வசந்தகுலசிங்கம், ஜி. எஸ்.

From நூலகம்
Name வசந்தகுலசிங்கம்
Birth 1917.07.28
Pages 1985
Place ஆனைக்கோட்டை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வசந்தகுலசிங்கம், ஜி. எஸ். (1917.07.28 - 1985) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர். இவர் தனது பாடசாலைக் காலத்தில் புல்லாங்குழல், கிளாரினட், தபேலா, வீணை ஆகிய வாத்திய இசைகளையும் வாய்ப்பாட்டு இசை, நாட்டிய இசை ஆகியவற்றையும் உரிய முறையில் பயின்றதுடன் 1949 ஆம் ஆண்டளவில் பரமேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

தனது இசைப் பயிற்சிகளுடன் ஹிந்துஸ்தானி இசையிலும் ஆர்வமுள்ளவராக விளங்கிய இவர், புல்லாங்குழலில் கர்நாடக இசையுடன் ஹிந்துஸ்தான் இசையையும் வழங்கி வந்துள்ளார். இவருடைய இசைத் திறமையால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய கீதத்திற்கான ஒலிப்பதிவில் 1952 ஆம் ஆண்டு புல்லாங்குழலைப் பின்னணியாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

Resources

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 52-53