ஆளுமை:றஊப், சாலித்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றஊப்
தந்தை சாலித்தம்பி
தாய் சுபைதா உம்மா
பிறப்பு 1975.03.02
ஊர் அக்கரைப்பற்று
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
Strauf.jpg

ரஊப், சாலித்தம்பி,( 1975.03.02-) அக்கரைப்பற்றை சேர்ந்த ஓர் ஊடகத்துறை ஆளுமையாவார். இவர் சாலித்தம்பி - சுபைதா உம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வராவார். இவர் தனது இளம் பருவத்திலேயே மிகவும் துடிதுடிப்புடையவராகவும் எழுத்தற்றல், பேச்சுத் திறன், இனிமையான குரல் வளமுள்ளவராகவும் விளங்கினார்.

1981 ம் ஆண்டு இவர் தனது ஆரம்பக் கல்வியை கமு / அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும் அதனைத் தொடர்ந்து உயர் கல்வியை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) கற்றார். இவர் தனது பள்ளிப் பருவத்தில் கலை இலக்கியத்துறைகளில் மிகவும் ஆர்வத்துடனும், பிரியத்துடனும் பங்குபற்றி பல்வேறு சிறப்பு விருகளையும் பெற்றுள்ளார். பாடசாலைக் காலத்தில் விளையாட்டுப் போட்டிகளையும் மற்றும் கலை, கலாசார விழாக்களையும் தொகுத்து வழங்கியதுடன் தனது பிரதேசத்தில் பரீட்சார்த்த ஒலி, ஒளி அலைவரிசைகளையும் ஏற்படுத்தி ஒலி,ஒளி துறைகளில் சிறந்து விளங்கினார் . தனது கலை ஆர்வத்தின் காரணமாக தேசிய ரீதியில் காலடி எடுத்து வைக்கும் முகமாக 1996 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து அதில் தேசிய, வர்த்தக , முஸ்லிம் சேவை, பலாலி - யாழ்சேவை என்பனவற்றில் பகுதி நேர அறிவிப்பாளராகக் கடைமையாற்றினார் . ஒலிபரப்புத் துறையில் முழுமையாக ஈடுபட்டதன் காரணமாக நாடளாவிய ரீதியில் தமிழ் பேசும் வானொலி நேயர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவராக திகழ்கின்றார்.

தனது கலைப்பயணத்தில் தனக்கென ஒரு தனி இடத்தினைப் பதிப்பதற்காக கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்று சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் 1998 இல் தனியார் துறை வானொலியான சூரியன் FM (பண்பலைவரிசை) இல் தன்னை இணைத்துக் கொண்டு தனது கலைப்பயணத்தில் சுதந்திரமாகப் பறந்து சூரியன் FM ல் நேற்றயக் காற்று மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை பிரமாதமாகப் படைத்து தனக்கும் சூரியனுக்கும் தேசிய ரீதியில் பெருமை தேடித்தந்தவராவார். தனது பரினாம வளர்ச்சியில் மற்றுமொரு கட்டமாக சக்தி FM இல் இணைந்து சிறந்த செய்தி வாசிப்பாளராகவும் வணக்கம் தாயகம் இதயராகம் முதலிய பல்வேறு நிகழ்ச்சிகளை சிறந்த முறையில் தயாரித்தளித்து தமிழ் பேசும் நேயர்களை சக்தியுடன் இணைத்த பெருமையும் இவரையே சாரும் . அதனைத்தொடர்ந்து கெப்பிடல் FM இல் தனது சேவையை தொடர்ந்து வருகிறார்