ஆளுமை:ரிம்ஸா, முஹம்மத்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரிம்ஸா
தந்தை முஹம்மத்
தாய் லரீபா
பிறப்பு 1978.04.20
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரிம்ஸா, முஹம்மத் (1978.04.20 - ) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மத்; தாய் லரீபா. இவர் வரகாப்பொளை பாபுல் ஹஸன் மத்திய மகாவித்தியாலயம், வெலிகம அறபா தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர், தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராக தொழில் புரிந்து வந்துள்ளார்.

1998ம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறை ஈடுபாடு கொண்டுள்ள இவரது முதலாவது ஆக்கம்‘சமாதானமே வா’ எனும் தலைப்பில் சூரியன் FM இல் இடம்பெற்றது. அன்றிலிருந்து 180க்கு மேற்பட்ட கவிதைகளையும், 25க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மித்திரன் வாரமலர், நேத்ரா அலைவரிசை உதய தரிசனம், எங்கள் தேசம், தினகரன் வாரமஞ்சரி செந்தூரம் இதழ் ஆகியவற்றில் இவரது நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.

வங்கிக்கணக்கிணக்கக் கூற்று, ISBN 955-8409-09-X, கணக்கீட்டுச் சுருக்கம், ISBN 978-955-8741-37-5, கணக்கீட்டின் தெளிவு ISBN 955-50020-2-9, தென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு) ISBN 978-955-1810-10-8 போன்ற நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.

இவரது சமூக சேவை, கலை இலக்கியப் பணிகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாபதி என்ற பட்டத்தை இவருக்கு வழங்கியுள்ளது.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 28-31
  • நூலக எண்: 1029 பக்கங்கள் 15
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ரிம்ஸா,_முஹம்மத்&oldid=176820" இருந்து மீள்விக்கப்பட்டது