ஆளுமை:ரஹீமா, எம்.ஏ

From நூலகம்
Name ரஹீமா
Pages ஏ.ஆர்.எம்.முஹம்மத்
Pages உம்மு ஹுஸைமா
Birth 1952.05.11
Place கொழும்பு
Category எழுத்தாளர், கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரஹீமா, எம்.ஏ (1952.05.11) கொழும்பில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஏ.ஆர்.எம்.முஹம்மத்; தாய் உம்மு ஹுஸைமா. ஆரம்பக் கல்வியை கொழும்பு மிகுந்து மாவத்தை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும் உயர் கல்வியை திஹாரிய தாருஸ்ஸலாம் முஸ்லிம் வித்தியாலயத்திலும் கற்றார். கல்விப் பின் டிப்ளோமா முடித்துள்ளார். 22 வருடகாலம் ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

1978ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார் ரஹீமா. சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், நாடகம் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இவரின் முதலாவது சிறுகதை 1978ஆம் ஆண்டு கனவுகள் கலைகின்றன எனும் தலைப்பில் தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. தொடர்ந்து தினகரன், வீரகேசரி ஆகிய நாளிழ்களிலும் மல்லிகை, நேர்வழி, அஷ்ஷுரா ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. இலங்கை வானொலியின் இலக்கிய மஞ்சரி, மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிகளிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன.