ஆளுமை:ரஜிதா, இராசரத்தினம்

From நூலகம்
Name ரஜிதா
Pages இராசரத்தினம்
Pages நிர்மலா
Birth 1995.08.30
Place குடத்தனை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரஜிதா, இராசரத்தினம் யாழ்ப்பாணம் குடத்தனை மேற்கு மணற்காட்டில் பிறந்தவர். இவரின் தந்தையின் பெயர் இராசரத்தினம். தாயின் பெயர் நிர்மலா. ஆரம்பக் கல்வியை யா/குடத்தனை அ.த.க பாடசாலையிலும் இடைநிலை உயர்க் கல்வியை யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர கல்லூரியிலும் கற்றார். சிறுவயது முதலே நாவல், சிறுகதை, இலக்கியங்கள் சார் விளையாட்டு என ஈடுபாடு அதிகம் கொண்டவர். பாடசாலையில் இடம்பெற்ற கவிதை, கட்டுரை , சிறுகதை போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களையும் பெற்றுள்ளார். இவரின் ஆக்கங்கள் இலங்கையில் வெளிவரும் நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. வானொலி ஒன்றில் மூன்று வருடங்களாக பணியாற்றியுள்ளார். ஈழத்துக் கலைப்படைப்புகள் பற்றிய நிகழ்ச்சி, வார இறுதி நிகழ்ச்சிகள் என தொகுத்து வழங்கியுள்ளார். இதயங்கள் பேசட்டும் எனும் இரவு நேர காதல் நிகழ்ச்சி இவரை கவிதை நூல் ஒன்றை எழுதக் காரணமாகியதென்கிறார் எழுத்தாளர். சூழலியல், காதல் மற்றும் சமூகத்தில் தானாக இடம்பெறும் நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற போது எழுத்துக்களாய் வெளிப்படுத்தப்படும் உணர்வலைகளைக் கவிதைகளாக்கி மணற்கும்பி எனும் இவரின் முதலாவது கவிதை நூலை 23.06.2019ஆம் திகதி வெளியிட்டார். பசுமைச்சுவடுகள் அமைப்பின் செயற்பாட்டாளாக தொழிற்பட்டு வருகின்றார். இந்த அமைப்பு சார்பாக சூழலியல் சார் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இயற்கை உரங்களின் பாவனை விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அதேவேளை, பொலித்தின், பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனையை இல்லாமல் செய்தல், கடற்கரையோரச் சுத்தம், மர நடுகையை ஊக்குவித்தல் போன்ற களப்பணிகளையும் செய்து வருகின்றார். வாசிப்புப் பழக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ள எழுத்தாளர் மொழிபெயர்ப்பு நாவல்களை வாசிப்பதையும் ஊக்குவிக்கிறார். தன்னை ஒரு எழுத்தாளராகவும் சமூக சேவையாளராகவும் வெளிப்படுத்தினாலும் இயற்கையையோடு ஒன்றிணைந்து வாழ்வதையே பெருமளவு விரும்புகின்றார்.


குறிப்பு : மேற்படி பதிவு ரஜிதா, இராசரத்தினம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.