ஆளுமை:ரங்கா, விவேகானந்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரங்கா
தந்தை விவேகானந்தன்
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை பெண் ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
RankaVivekananthar.jpg

ரங்கா விவேகானந்தன் யாழ்மாவட்டத்தில் வல்வை மண்ணில் பிறந்த ஒரு நாட்டியக்கலைஞர். தனது எட்டாவது வயதில் தனது முதலாவது குரு காலஞ்சென்ற கீதாஞ்சலி கே.நல்லையா அவர்களிடம் பரதம் பயின்று அரங்கேறிய ரங்கா, பின்னர் தென்னிந்தியா சென்று பரதத்தின் நுணுக்கங்களை குரு மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடமும், கதகளி நாட்டியக்கலையை குரு கோபிநாத் அவர்களிடமும், மோகினி ஆட்டம் என்ற ஆடற்கலையை குரு கலாமண்டலம் நடனம் கோபாலகிருஷ்ணன் அவர்களிடமும் பயின்று, தனது சிறப்புக்கலையான குச்சுப்புடி நடனத்தை குச்சுப்புடி கலைக்கழக நிறுவனரான குரு வேம்பட்டி சின்ன சத்தியம் அவர்களிடம் உயர்நிலைமாணவியாக தேர்ந்து, 'நாட்டிய விசாரத்' என்ற டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். தனது குச்சுப்புடி நாட்டியக்குருவான வேம்பட்டி சின்னசத்யம் அவர்களுடன், இந்தியாவெங்கும் நிகழ்ச்சிகள் நடத்தி ஊடகங்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்ற ரங்கா, தொடர்ந்து விசேட அழைப்புக்களின் பேரில் இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, சுவீட்சலாந்து, தென்னாபிரிக்கா, அமெரிக்கா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் எலிசபெத் மகாராணி உள்ளிட்ட உலகப்பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் பலர் முன்னிலையில் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார்.

தொழில்ரீதியான மேற்கத்திய 'பாலே' நடனக்கலைஞர்கள் உள்ளிட்ட வேறுபட்ட நாட்டியக்கலைஞர்களுக்காக சிறப்புப் பயிற்சிப்பட்டறைகள் நடாத்தவும் ரங்கா அழைக்கப்பட்டிருக்கிறார்.

இத்தாலியில் ஸ்போலெற்றோ என்ற நகரில்; நடைபெற்ற 'இரண்டு உலகங்களின் நாட்டியவிழா', ஜெர்மனியில் பொன் நகரிலும், இத்தாலியில் அங்கோனா நகரிலும், குறோசியா நாட்டிலும் நடைபெற்ற சர்வதேச நாட்டியவிழாக்களில் இந்திய நடனக்கலையை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் நடனமாட ரங்காவை அழைத்திருந்தார்கள். கீழைத்தேய கலையின் பரிச்சியமே இல்லாத தென் அமெரிக்காவின் ஆர்ஜென்ரீனா நாட்டில் வாழ்ந்து கொண்டு 'ஆனந்தராஜம்' என்ற பெயரில் இந்த நாட்டின் முதலாவது இந்திய நாட்டிய, இசைப்பள்ளியை நிறுவி நடத்திவருகிறார்.

ஸ்பானியமொழி பேசும் சிறுமிகளும், இளம்பெண்களும், தென்னிந்தியபாணி நடன ஆடையலங்காரங்களுடன், குச்சுப்புடி நடனங்களை இவரது நெறியாள்கையில் பயின்று அரங்கேறி வருகிறார்கள். மொழிபுரியாவிடினும், இசையினாலும், ஆடற்கலையின் அழகினாலும் கவரப்பட்ட அந்நாட்டுப்பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு புதிய கலைவடிவத்தில் பயிற்சிபெற ரங்காவின் 'ஆனந்தராஜம்' நடனப்பள்ளிக்கு மகிழ்வுடன் அனுப்பிவருகிறார்கள். நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் அடியொற்றி பாக்குநீரிணையை நீந்திக்கடந்து, வேறு பலசாதனைகளை நிறுவி, ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடக்கும் முயற்சியில் இறப்பைத்தழுவிக்கொண்ட 'ஆழிக்குமரன்' ஆனந்தன், ரங்காவின் (ரங்கமணியின்) உடன்பிறந்த சகோதரனாவார்.

இவற்றையும் பார்க்கவும்

  • [[:பகுப்பு:|இவரது நூல்கள்]]


வளங்கள்

  • நூலக எண்: பக்கங்கள்
  • நூலக எண்: பக்கங்கள்
  • நூலக எண்: பக்கங்கள்


வெளி இணைப்புக்கள்