ஆளுமை:முகம்மது அலி, ஏ. எம்.

From நூலகம்
Name முகம்மது அலி
Birth 1948.10.13
Place திருகோணமலை
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது அலி, ஏ. எம். (1948.10.13 - ) திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர். இவர் எழுத்துப்பணியை 1974 இல் ஆரம்பித்து 37 வருடங்களுக்கு மேலாக ஆற்றியுள்ளார். இவர் 1968 முதல் 1972 வரை இலங்கை கனிப்பொருள் மணற் கூட்டுத்தாபனத்தில் நேர்ப்பதிவாளராகவும் மேற்பார்வையாளராகவும் பணியாற்றியதோடு இலங்கை சுயேச்சை வான்படையில் போர்ப்பணியிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் டெலிக் (Delic) ஆங்கிலப் போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்து இலங்கை அரச பாடசாலையொன்றில் ஆங்கில ஆசிரியராகவும் 1996 முதல் 2008 வரை இலங்கை அதிகார சபையில் உத்தியோகத்தராகவும் சேவையாற்றியுள்ளார்.

இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினபதி, சிந்தாமணி, நவமணி, எங்கள் தேசம், மீள்பார்வை, விடிவெள்ளி, யாத்ரா, ஞானம் ஓசை, நீங்களும் எழுதலாம், குரல், அம்சம், அபியுக்தன், நாளை நமதே, அல்ஹஸனாத், உண்மை, உதயம், ஊற்று, நேசன், சிரித்திரன் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் குடையும் அடைமழையும் என்ற கவிதைத் தொகுப்பையும் ஒரு தென்னை மரம் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 10161 பக்கங்கள் 03-04