"ஆளுமை:மாதினியார்," பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மாதினியார்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

19:44, 28 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

பெயர் மாதினியார்
தந்தை மு.சிற்றம்பலம்
தாய் பராசக்தி
பிறப்பு 1942.04.26
இறப்பு -
ஊர் ஏழாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாதினியார் என்ற இயற்பெயரைக் கொண்ட ஆனந்தி (1942.04.26) ஏழாலையில் பிறந்தவர், இவரது தந்தை சிற்றம்பலம்; தாய் பராசக்தி. ஆரம்ப கல்வியை ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலயத்திலும், உயர் கல்வியை யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியிலும் கற்றுள்ளார். இவரின் எழுத்துத்துறை பிரவேசம் 1961ஆம் ஆண்டில் இடம்பெற்றது. ஆரம்பகாலத்தில் தமிழ்குடிகொண்டான் என்ற புனைபெயரில் அரசியல் கட்டுரைகளை எழுதி வந்ததாக எழுத்தாளர் தெரிவிக்கிறார். நான் என்ற உளவியல் மஞ்சரியில் வெளிவந்த குறுநாவலான "பொதுவீடு" இவரின் முதலாவது நாவலாகும். "நெறி தவறாத வாழ்க்கை சத்தியம் ஒன்றுக்காக மட்டுமே என் பேனா கண் திறக்கும் காட்சிமயமான கற்பனை எதுவும் என்னிடம் பிறப்பதில்லை உயிர்ப் பிரக்ஞை தப்பாத என் எழுத்துத் தவம் பலதடைகளுக்கு நடுவே தான் இன்னும் சாகாவரம் பெற்று உயிர்ப்புடன் நிற்கிறது வயது முதிர்ந்த நிலையிலும் அது மாறவில்லை." என்கிறார் எழுத்தாளர் ஆனந்தி. இவர் நிறையக் கதைகள் எழுதியிருக்கிறார். முதலில் அரசியல் கட்டுரைகள் எழுதி விட்டுப் பின்னர்தான் சிறுகதை எழுத ஆரம்பித்ததாக தெரிவிக்கிறார் எழுத்தாளர். மல்லிகையிலும் ஜீவநதி இதழிலும் தனது கதைகள் நிறையப் பிரசுரமாகியுள்ளதை நன்றியுடன் நினைவுகூருகிறார் ஆனந்தி. இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 2009ம் ஆண்டு மல்லிகை வெளியீடாகத் துருவசஞ்சாரம் என்ற நூலும், ஜீவநதி வெளியீடாக ஆனந்தியின் இரு குறு நாவல்கள் என்ற நூலும் வெளிவந்துள்ளது. மூத்த எழுத்தாளருக்கான விருது இலங்கை வானொலியும் கொடேகே நிறுவனமுமாகச் சேர்ந்து இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

படைப்புகள்

குறிப்பு : மேற்படி பதிவு ஆனந்தி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வளங்கள்

  • நூலக எண்: 9015 பக்கங்கள் 33-35
  • நூலக எண்: 10206 பக்கங்கள் 34-36
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மாதினியார்,&oldid=281398" இருந்து மீள்விக்கப்பட்டது