ஆளுமை:மாணிக்கம், சி.வி.பி

From நூலகம்
Name மாணிக்கம்
Pages பழனியாண்டி
Birth
Place பதுளை தெமோதரை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாணிக்கம், சி.வி.பி பதுளையை தெமோதரையை பிறப்பிடமாகக் கொண்டவர். குறிஞ்சிவாணன் என்னும் புனை பெயரால் அனைவராலும் அறியப்பட்டவர். இவரின் ஆக்கங்கள் தினபதி, சிந்தாமணி, ராதா, சுதந்திரன் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. தனது 18 வயதில் எழுத்துத் துறைக்குள் பிரவேசித்துள்ளார். 1960-1970 வரையான காலப் பகுதியில் மலையகம் தொடர்பான கவிதைகளை எழுதிவந்தார். மலையக மக்களின் வாழ்க்கைத் துயரம், உழைப்பு, பொருளாதாரம், சுரண்டல், அரசியல், காதல் எனப்பல பொருளில் கவிதைகளை இவர் எழுதியுள்ளார்.

இவர் தனது 18 வது வயதில் வெற்றி நமதே என்னும் தலைப்பில் வீரகேசரிக்கு தனது முதற்கவிதையை எழுதினார். இக்காலப்பகுதியில் இவரது 100 க்கும் மேற்பட்ட கவிதைகள் பிரசுரமாகின. 1968 இல் கல்லச்சு இயந்திரம் ஒன்றைத் தயாரித்து அதன்மூலம் மலைக்கீதம் எனும் மெல்லிசைப் பாடல் தொகுதியொன்றை வெளியிட்டார். அடுத்து மலையக மக்களின் பிரச்சினைகளை மையமாகவைத்து தேனிசை என்ற பாடல்தொகுப்பைப் பிரசுரித்தார். இன்னும் விடியவில்லை எனும் மரபுக் கவிதைத் தொகுதியில் இவரது கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

பதுளை பிரதேசத்தில் வாழ்ந்த காலங்களில் ஆலி-எல மலையக மறுமலர்ச்சி மன்றம், ஆலி-எல இந்து இளைஞர் பேரவை போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகளில் பங்குகொண்டார். தரமான மரபுக்கவிதைகளைத் தந்த குறிஞ்சிவாணன் மலையகத்திலிருந்து புலம்பெயர்ந்து அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாகாமம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

படைப்புகள்

Resources

  • நூலக எண்: 8011 பக்கங்கள் 19

வெளி இணைப்புக்கள்