ஆளுமை:மகேந்திரராசா, கிருஷ்ணபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேந்திரராசா
தந்தை கிருஷ்ணபிள்ளை
தாய் நேசம்மா
பிறப்பு 1965.03.12
ஊர் இரணைமாதாநகர்
வகை நாடக ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணபிள்ளை மகேந்திரராசா மட்டக்களப்பு அமிர்தகளியில் பிறந்தார். (1965.03.12) ஆரம்பக்கல்வியை அமிர்தகளி ஸ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயத்திலும் உயர்கல்வியை மட்டு. இந்துக்கல்லூரியிலும் தரம்12 வரை கற்றார். இவர் தந்தையாரிடமும் பாடசாலையிலும் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களால் நடிப்புத்துறைக்குள் ஈடுபாட்டுடன் பிரவேசித்தார். ஆரம்ப காலங்களில் இந்திரனின் மந்திரியாக நடித்தார். உதைபந்தாட்ட நடுவராகவும் இருந்தார். 1989 ஆம் ஆண்டு இரணைதீவில் திருமணம் முடித்ததன் ஊடாக குடியேறினார்.1992 ஆம் ஆண்டில் இரணைமாதாநகரில் குடியேறினார். தமிழோசை என்ற நாவலில் கதை ஆசிரியராக இருந்து ’இயேசு ஒரு போராளி“ எனும் கட்டுரையை எழுதியதன் ஊடாக புகழ் கிடைத்தது. 1973 ஆம் ஆண்டு முதன்முதலில் வள்ளி திருமணம் என்ற நாடகத்தை நடித்தார். 1974 சத்தியவான் சாவித்திரி நாடகத்தை நடித்தார். 1993ஆம் ஆண்டிற்கு பின்னர் தனது கிராம மக்களையும் அயற்கிராமத்து மக்களையும் இணைத்து தனிப்பிறவி, தமிழ்மணம், அன்னைத்தமிழ், ஆலயமணி அக்கினிப்பிறவி ஆகியநாடகங்களை எழுதி அரங்கேற்றம் செய்துள்ளார். இரணைமாதாநகரினதும் , அங்கு வாழ்ந்த மக்களது பாரம்பரியங்கள் தொடர்பிலும் வரலாறை எழுதியுள்ளார். யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க கலைத்துறையின் போட்டி நிகழ்வுகளில் பாடல் எழுதி, நாடகம் எழுதி சான்றிதழ்கள் பெற்றுள்ளார். பாடுமீன் கலை இலக்கிய மன்றத்தின் தலைவராகவும் இருந்தார். பொதுவாக கவிதை , பாடல் போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். பாடகராகவும் விளங்குகின்றார். இரணைமாதாநகரின் ஆரம்பத்தில் பங்களிப்புச் செய்துள்ளார். இரணைமாதாநகர் றோ.க.பாடசாலை, முழங்காவில் தேசிய பாடசாலை ஆகியவற்றில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராக இருந்தார். அங்கும் நாடகச் செயற்பாடுகளை முன்னெடுத்தார். கிராம முன்னேற்றச் சங்கத்தின் தலைவராகவும், மீனவர் சங்கத்தின் செயலாளராகவும், புனித செபமாலை மாதா ஆலய நிர்வாக உறுப்பினராகவும்