ஆளுமை:புத்திரசிகாமணி, யசோதரை

From நூலகம்
Name யசோதரை
Pages புத்திரசிகாமணி
Pages தவமணி
Birth 1981
Place நாவலப்பிட்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புத்திரசிகாமணி, யசோதரை (1981) நாவலப்பிட்டியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை புத்திரசிகாமணி (சிரேஷ்ட ஊடகவியலாளர்); தாய் தவமணி. இவர் நாவலப்பிட்டியை பிறப்பிடமாகவும் இறக்குவானையை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார். இ/எம்பி.பரியோவான் தமிழ்க்கல்லூரியில் பாடசாலைக் கல்வியினையும், தஞ்சாவூர் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் தமிழியல் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவரின் எழுத்துலக பிரவேசமானது தரம் பத்து படிக்கும்போதே ஆரம்பமாகியது. 2000ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியிலான கவிதை போட்டியில் தங்கப்பதக்கம் வெற்றுள்ளார். எழுத்தாளர் யசோதரையின் கவிதைகள் வீரகேசரி, மதிமுரசு பத்திரிகைகளில் வெளிவந்தது. "நன்றிக்கு ஒரு நாளேடு" என்ற சிறு கவியேட்டினை இவர் தனது ஆசிரியர்களுக்கு பரிசளித்துள்ளார். இவரின் ஆக்கங்கள் பாடசாலை,கல்லூரி வெளியீடுகளில் பதிப்பாகியுள்ளது. சூழலுக்கேற்ப அதே நேரத்தில் கவி புனையும் ஆற்றல் கொண்டுள்ளதோடு சிறுகதை மற்றும் நாடகங்களையும் தயாரித்து நெறியாள்கை செய்துள்ளார். இவரின் நாடக படைப்புகள் மாகாண தேசிய மட்டங்களில் தடம் பதித்துள்ளன. ஊடகத்துறையில் குறிப்பாக அறிவிப்புத்துறையில் ஆர்வமுள்ள இவர் தற்போது "ஆதித்யா ஜெயதசி" என்ற புனை பெயரில் தினக்குரல் பத்திரிகையின் வார வெளியீட்டில் தொடர்ச்சியாக கட்டுரை எழுதி வருகிறார்.

குறிப்பு : மேற்படி பதிவு புத்திரசிகாமணி, யசோதரை அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.