ஆளுமை:பிரவீனா, கணேஷன்

From நூலகம்
Name பிரவீனா
Pages கணேஷன்
Pages அம்பிகா
Birth
Place ஹட்டன்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரவீனா, கணேஷன் ஹட்டனில் பிறந்த எழுத்தாளர். இவரின் தந்தை கணேஷன்; தாய் அம்பிகா. ஹட்டன் பிரவீனா எனும் புனை பெயரில் எழுதி வருகிறார். ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரியில் கற்றார்.

சிறு வயதில் இருந்தே எழுத்துத் துறையில் பிரவேசித்துள்ள இவரின் முதலாவது நூல் ”தூவல்” எனும் கவிதைத் தொகுதியாகும். இதில் நாற்பத்தைந்து கவிதைகளையும் பதினாறு குறுங் கவிதைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். அத்தோடு இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளருமாவார். சுயதொழிலாக ஆடைவடிவமைப்பை மேற்கொண்டு வருகிறார். ஆடைகளுக்கு ஆரி வேலைப்பாட்டை செய்து வருகிறார்.

வெளி இணைப்புக்கள்