ஆளுமை:பவானி குகப்பிரியா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பவானி குகப்பிரியா
தந்தை தியாகராஜா
தாய் ரஞ்சிதம் சொர்ணலக்ஸ்மி
பிறப்பு
ஊர் கல்லடி
வகை கலைஞர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பவானி குகப்பிரியா, எஹம்பரம் மட்டக்களப்பு கல்லடியில் பிறந்த பெண்ஆளுமை. இவரது தந்தை கந்தையா; தாய் ரஞ்சிதம் சொர்ணலக்ஸ்மி. ஆரம்பக் கல்வித் தொடக்கம் உயர் கல்வி வரை மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்றார். தெய்வீக பாரதம் நடனத்தை அதன் அனைத்து சாராம்சத்துடனும் ஆன்மீக விழுமியங்களுடனும் வழங்கும் சமகால பாரதம் நடன ஆசிரியர்களில் ஒருவராக குகப்ரியா தலைசிறந்து விளங்குகிறார். அவர் தனது நடனப்பயணத்தை வெற்றிகரமாக இருபத்தொரு ஆண்டுகளாக மாவட்ட, மாகாண, தேசிய, சர்வதேச மட்டங்களில் தொடர்கிறார்.

பவானி ஆரம்பத்தில் பரதத்தை இலங்கையின் கிழக்குபல்கலைக்கழகத்தின் நடனத்துறையின் முன்னாள் தலைவரான கமலா ஞானதாஸிடமிருந்து கற்றுக்கொண்டார். 1991 முதல் 1994 வரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பரதத்தில் நான்கு ஆண்டு டிப்ளோமா படிப்பைப்படித்தார். இப்பாடத்திட்டத்தில் முதல் வகுப்பைப்பெற்ற அவர், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக பணியாற்றினார். திருமணத்தைத் தொடர்ந்து அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார். 1998ஆம் ஆண்டில், ஒரு பயிற்றப்பட்டபட்டதாரி ஆசிரியராக கல்வித்துறையில் சேர்ந்ததுடன் திருகோணமலையில் தி/ஸ்ரீசண்முகா இந்துமகளிர்கல்லூரியில் பணியாற்றினார். பவானி, திருகோணமலை தி / ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பணிபுரிந்தகாலத்தில், பல நடன நிகழ்ச்சிகளைத் தயாரித்து இயக்கியதுடன், அவற்றை தேசிய, சர்வதேச மட்டங்களில் வழங்கினார் அத்துடன் கல்லூரிக்கு பல கோப்பைகளையும் தங்கப்பதக்கங்களையும் பெற்றார்.

2010 ஆம் ஆண்டில் கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் சேர்ந்தார். பல வெற்றிகளை கல்லூரிக்கு தேசிய அளவில் கொண்டுவந்தார். இந்துக் கல்லூரியில், நுண்கலைச்சங்கம்,, இந்துசங்கம், விளையாட்டுக்குழு,பரீட்சைக்குழு ஆகியவற்றிற்கான அலுவலகங்களை நடாத்தினார். “நாட்டியாகலாமணி” பவானிகுகபிரியா பரதத்தில் டிப்ளோமாவும் கல்வியில் முதுகலை டிப்ளோமாவும் பெற்றார். டொக்டர் பத்மா சுப்பிரமணியத்தின் சீஷ்யையாக விளங்கியதுடன் தஞ்சாவூர் சாஸ்திர பல்கலைக்கழகத்தில் சிறப்பாக பயிற்சி பெற்றவர். அவரது படைப்பாற்றல் தனித்துவமானதுடன் கற்பித்தல் கலை புதுமையானது. அவரது சிறந்த படைப்புகள் மூலம் அவர் ஒரு அசாதாரண நடனக் கலைஞராக அடையாளம் காணப்படுகிறார்.

பாவானியின் தந்தை, மறைந்த கந்தையா தியாகராஜா, ஒரு சிறந்த கல்வியாளர், அரசியல்வாதி, தீவிரசமூக சேவகர். பல்வேறு முக்கியமான பதவிகளில் தேசத்திற்கு மகத்தான சேவை செய்தவர்; மட்டக்களப்பு மேயர், மட் / சிவானந்தா வித்யாலயம், வடகிழக்கு மாகாண கல்வித்துறையின் மாகாணகல்வி இயக்குநர், வடகிழக்கு மாகாணசபையின் கல்வி, கலாச்சார விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர், சுவாமி விபுலானந்தா நூற்றாண்டு விழாச்சபையின் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்துள்ளார், மட்டக்களப்பின் தற்போதைய மேயர் த.சரவணபவன் தியாகராஜா பவானியின் சகோதரர் ஆவார். அவரது கணவர் எம். எஹம்பரம் முன்னணி சீமெந்துக்கூட்டுத்தாபனத்தின் இயக்குனரானஆவார்.

தியாகராஜர் கலைகோவில் பாவனியின் தந்தை தியாகராஜா அவர்களின் நினைவாக நிறுவப்பட்டது. " இதன் நோக்கம் கருவிலேயே நடனதிறமைகள் உள்ள குழந்தைகளிடம் இருக்கும் நடன திறமைகளை வெளிப்படுத்துவதும், பல்துறை நடனக்கலைஞர்களாக அவர்களை உருவாக்குவதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிப்பதும் ஆகும். அத்துடன் சிறுவர்களுக்கு யோகாகலையும் இங்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. பவானி குகப்பிரியா எழுதிய பல கட்டுரைகள் வீரகேசரி நாளிதழ், அபிநயா சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. 2017ஆம் ஆண்டில் “சிங்கப்பூரின் தமிழ் மொழி விழாவில்”கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்ட கீழைத்தேய நடன நாடகமான “சிவகாமின்சபாதம் , 2018ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் தமிழ்மொழி விழாவில் கீழைத்தேய நடன நாடகமான மண்ணும்மக்களும் (சிலப்பதிகாரத்தின் கதாநாயகி கண்ணகியின் வாழ்க்கையில் ஐந்து நிலங்கள்) ஆகிய கலை நிகழ்ச்சிகள் மிகவும் பாராட்டைப் பெற்றன.

தேசிய, சர்வதேச சிம்போசியங்கள் பயிற்சிப் பட்டறைகளில் தீவிரமாக பங்கேற்றுள்ளார். 2000ஆம் ஆண்டு முதல் 2017 வரை பி.எம்.ஐ.சி.எச், கொழும்பு ராமகிருஷ்ணாமிஷன், கொழும்புத் தமிழ்ச்சங்கம், ஐ.ஆர்.டி.எச், ஹிடன்ஐடல்பவுண்டேஷன், பம்பலபிட்டி கதிரேசன் ஹால்,சரஸ்வதி மண்டபம் ஆகிய இடங்களில் தமிழ் மற்றும் இந்து இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.


விருதுகள்

2002ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இந்து மாநாட்டில், செல்வி பவானியின் உருவாக்கம் முன்னாள் இந்துவிவகார அமைச்சர் மறைந்த மகேஸ்வரனால் பாராட்டப்பட்டதுடன். அவர் தன்னிச்சையாக 50,000 / = பணப்பரிசையும் வழங்கினார்

“தேசபந்து” என்ற உயரிய விருதை 2015ஆம் ஆண்டு இலங்கை அரசு வழங்கியது.

“கலாசரஸ்வதி” எனும் பட்டத்தை  “தென்கயிலை ஆதீனம்” திருகோணமலையில் வைத்து வழங்கியது.  

குறிப்பு : மேற்படி பதிவு பவானி குகப்பிரியாஅவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.


வளங்கள்

  • நூலக எண்: 11706 பக்கங்கள் 5
  • நூலக எண்: 36370 பக்கங்கள் 15

வெளி இணைப்புக்கள்