ஆளுமை:பத்மாலினி, பிரான்சிஸ்

From நூலகம்
Name பத்மாலினி
Pages பிரான்சிஸ்
Birth
Place பாஷையூர்
Category கலைஞர்

பத்மாலினி, பிரான்சிஸ் யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகம்,கூத்து, இசைநாடகக் கலைஞர் ஆவார். பிரபல நாடகக் கலைரான யூட்கொலின் இவரது சகோதரராவார். இவர் தனது நான்கு வயதில் இருந்தே கூத்தில் ஈடுபட்டு வருகிறார். ”திருநீலகண்டன்” என்ற கூத்தில் ஞானப்பூ என்ற பெண்பிள்ளை பாத்திரம் ஏற்று நடித்ததின் ஊடாக கலைத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். வீரகுமாரனின் சபதம், பிரகாசராசன் (முன் அரசன்), அரக்கன், பாம்பாட்டி, விக்கிரமாதித்தன், தியாகத்தழும்பு, சமர்க்களவீரன், சந்தியோகுமையோ போன்ற கூத்திலும், கயல்விழி, பூவுக்குள் பூகம்பம், புயலான தேசம், வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் ஆகிய கற்பனை நாடகங்களிலும் நடித்துள்ளார்.