ஆளுமை:நாகூர் உம்மா, காதர்

From நூலகம்
Name நாகூர் உம்மா
Pages சேகு முஹம்மது
Pages அஹமது செய்னம்பு
Birth
Place தெல்தோட்டை
Category
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகூர் உம்மா, காதர் தெல்தோட்டை வனஹப்பவையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சேகு முஹம்மது; தாய் அஹமது செய்னம்பு. அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் இவரது தாய்வழி உறவாகும். நூர் என்ற அல்லாப்பிச்சை புலவரும் இவரது தாய்வழி சொந்தம். இலக்கிய பின்னணியைக் கொண்ட நாகூர் உம்மா காதர் அருள்வாக்கி அப்துல் காதர் புலவரின் பெயரில் இருந்த வித்துவதீபம் வித்தியாலயம் எனசல்கொல்லை மத்திய கல்லூரி கல்வி கற்றார். 1966ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் தொடர்ந்து கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றினார் இவர் ஒரு முதலாம்தர அதிபராவார். 37 வருடம் அரச சேவையில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார்.

மணிக்குரல் சஞ்சிகையில் தான் இவரது முதலாவது கட்டுரை வெளிவந்தது. மலையகத்தில் இருந்து வெளியான மலைப்பொறி, கலைமலர் சஞ்சிகை, தினகரன் நாளிதழ் பத்திரிகையிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. 1975ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இலங்கை வானொலியிலும் தொலைக்காட்சியிலும், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ், நெஞ்சோடு நெஞ்சம் ஆகிய நிகழ்ச்சிகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. வனஹபுவ கல்விச் சங்கம், மாதர் சங்கங்களின் தலைவியாக சமூகப் பணிகள் செய்து வருகிறார்.

விருதுகள்

மலையக கலை கலாசார சங்கத்தினால் – தேசபிமானி – கல்வித்தீபம் விருது.

கல்வி அமைச்சினால் சிறந்த அதிபருக்கான விருது.

அகில இன நல்லிணக்க ஒன்றியத்தினால் – ”இல்முல் ஐன்” (கல்விக் கண்) மற்றும் சாமஸ்ரீ தேச கீர்த்தி விருது.

நம்நாட்டு நற்பணி மன்றத்தினால் சத்திய ஜோதி விருது.