ஆளுமை:நடேசு, ஐயாத்துரை

From நூலகம்
Name நடேசு
Pages ஐயாத்துரை
Birth 1906
Pages 1988
Place
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடேசு, ஐயாத்துரை (1906- 1988) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நிலைப்பொருள் ஓவியர். இவரது தந்தை ஐயாத்துரை. இவர் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் 1930-1940 வரை ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவரது ஓவியங்கள் அனைத்தும் 1947 ஆம் ஆண்டிற்கு முன்னர் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என ஓவியர் இராசரத்தினம் குறிப்பிடுகின்றார்.

இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூற்றில் வளர்ச்சி பெற்ற யாழ்ப்பாண ஓவிய மரபில் நடேசுவின் நிலைபொருள் ஓவியங்கள் முக்கியத்துவம் பெறுவனவாகும். இவரது ஓவியங்களில் பின்னணியமைக்கப்பட்ட முறைமை, அதன் வர்ணத்தெளிவு என்பன குறிப்பிடத்தக்கவை. எண்ணிக்கையளவில் இவர் படைத்த நிலைப்பொருள் ஓவியங்களில் ஏழு கிடைக்கப்பெற்றுள்ளது. இவற்றில் ஐந்து ஓவியங்கள் ரேகைகளால் கட்டுப்படுத்தப்பட்ட வர்ணப் பிரயோகத்தை கொண்டனவாகவும் இரண்டு ஓவியங்கள் திட்டுத் திட்டான வர்ணப் பிரயோகத்தைக் கொண்டனவாகவும் காணப்படுகின்றன.

Resources

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 12


வெளி இணைப்புக்கள்