ஆளுமை:தேவியம்மள், நீலகண்டன்

From நூலகம்
Name தேவகியம்மாள்
Pages பசுபதி
Pages கமலமுத்து
Birth 1933.03.16
Pages 2004.01.02
Place யாழ்ப்பாணம்
Category பெண் ஆளுமைகள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தேவியம்மாள், நீலகண்டன் யாழப்பாணத்தில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை பசுபதி; தாய் கமலமுத்து ஆரம்பக் கல்வியை உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியை கோண்டாவில் சைவ வித்தியாசாலை, மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். கணிதம், சித்திரக்கலை, நடிப்பு, தையற்கலை, பேச்சாற்றல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.


தனது 17ஆவது வயதிலேயே ஆசியரானார். இவரின் முதல் ஆசிரியர் நியமனம் செட்டிக்குளம் நேரியகுளம் றோமன் கத்தோலிக்கத் தமிழ்ப் பாடசாலையாகும். கற்பிக்கும் போதே ஆசிரியர் கலாசாலையில் பிரவேசித்து பரீட்சை எழுதி சித்தியடைந்தார். திருநெல்வேலி சைவாசிரியர் கலாசாலை பரீட்சைக்குத் தெரிவாகி அங்கு பண்டிதமணியவர்களதும் தவமுனி கைலாசபதியவர்களதும் அபிமான மாணாக்கியானார். கலாசாலைப் புறக்கிருத்தியங்கள் அனைத்திலும் ஈடுபட்டுச் சிறப்பிடம் பெற்றார் . கலாசாலைச் சஞ்சிகைகளிற்கு அத்தாட்சி பயிற்றப்பட்ட ஆசிரியையாக வெளியேறிக் கொழும்பு விவேகானந்த வித்தியாசாலையில் நியமனம் பெற்றார். தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக யாழ்ப்பாணம் வல்வெட்டி அமெரிக்க மிஷன் தமிழ்ப் பாடசாலை, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கற்பித்தார். இக்காலப் பகுதியில் பண்டித பரீட்சையிலும் தேறினார்.

Resources

  • நூலக எண்: 62312 பக்கங்கள் {{{2}}}