ஆளுமை:தேவராஜா,சோமசுந்தரம்.

From நூலகம்
Name தேவராஜா
Pages சோமசுந்தரம்
Pages சற்குணம்
Birth 1953.11.17
Pages ஊர்= காலையடி பண்டத்தரிப்பு,யாழ்ப்பாணம்.
Place {{{ஊர்}}}
Category இடதுசாரி,சட்டத்தரணி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

Thevaraja somasuntharam.jpg

தேவராஜா சோமசுந்தரம் (1953.11.17 -) யாழ்ப்பாணம், காலையடி பண்டத்தரிப்பு. இவரது தந்தை சோமசுந்தரம்; தாய் சற்குணம். இவர் ஆரம்பக் கல்வியை திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தில் கற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டம் பெற்றார். மல்லாகம் நீதிமன்றத்தில் சட்டத்தரணி மற்றும் பதில் நீதவான்.

1973 இல் மறுமலர்ச்சி மன்றம், பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம், சாந்தை இந்து இளைஞர் மன்றம் ஆகிய கிராமிய அமைப்புகளை ஒன்றிணைத்து மது ஒழிப்பு இயக்கத்தினை உருவாக்கி திபாவளி தினத்தில் சாந்தையிலிருந்து காலையடி வரை மது ஒழிப்பு ஊர்வலத்தை முன்னின்று நடாத்தினார். சின்னமேளம் என்ற சதுர்ஆட்டத்தினை நிறுத்துவதற்கான பணிப்புலம் அம்பாள் ஆலயத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் பங்குகொண்டார். அதனைத் தொடர்ந்து மிகவும் பின்தங்கிய குறிச்சியாகிய பன்னமூலையில் அந்த ஊரின் இளைஞர்களை ஒன்றுதிரட்டி நல்வழிப்படுத்தும் நோக்கோடு காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றத்தை உருவாக்கினார். மாதகல் சகாய புரம் சாதி முரண்பாட்டினால் நேகிழ்ந்த இரட்டைக்கோலை வழக்கில் தாள்தப்பட்ட மக்கள்சார்பாக செயற்பட்டவர்.

புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி(இடது)யில் அரசியல் குழு உறுப்பினர், பொருளாளர் பதவிகளில் இருந்து அரசியல் பணிகளைத் தொடர்பவர். நூற்றுக்கணக்கான மேடைகளில் பேச்சாளர். 85 இல் மனித உரிமைகள் இயக்கத்தில் செயலாளராக இருந்து மனித உரிமையை வற்புறுத்தி ஊர்வலங்களை நடாத்தினார்.



வெளி இணைப்புக்கள்

https://web.archive.org/web/20110915170652/http://www.ndpsl.org/seithikal2d.php?newsid=91102 https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D https://www.marxists.org/history/erol/sri-lanka/history.pdf https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(021)_1990.01-02 https://sathiamanai.blogspot.com/2012/09/1969-02-05-1969.html https://sathiamanai.blogspot.com/2012/11/1978-1981-red-banner.html