ஆளுமை:தனலெட்சுமி, பரமேஸ்வரன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:44, 22 ஜனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தனலெட்சுமி
தந்தை அங்கப்பன்
தாய் பூமயில்
பிறப்பு 1962.08.24
ஊர் குருணாகல்
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தனலெட்சுமி, பரமேஸ்வரன் (1962.08.24) குருணாகல் மாவத்துகமையில் பிறந்தவர். இவரது தந்தை அங்கப்பன்; தாய் பூமயில். குருணாகல் தல்ஹஸ்பிட்டிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் படித்துள்ளார். தற்பொழுது கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரத்தில் வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். சமூகசேவையை அடிப்படையாகக் கொண்டு பல அமைப்புக்களில் பதவிகளை வகித்து வருகிறார். சர்வோதயச் சங்கத் தலைவர், மகளிர் விவகார சங்க உபதலைவர், இலங்கை சர்வமதக் குழு, இலங்கை காணாமல் ஆக்கப்பட்டோர் குழு போன்றவற்றிலும் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்திலும் அங்கம் வகிக்கும் இவர் மகளிர் விவகார சங்க உபச் செயலாளர், சிவில் அமைப்புக்களின் சம்மேளன கிளிநொச்சி மாவட்டத்தின் உறுப்பினர் போன்ற சமூக அமைப்புக்களின் ஊடாக சமூகசேவைகளை தனலெட்சுமி செய்து வருகிறார்.

குறிப்பு : மேற்படி பதிவு தனலெட்சுமி, பரமேஸ்வரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.