ஆளுமை:தனலஷ்மி, சிவயோகி சர்மா

From நூலகம்
Name தனலஷ்மி
Pages முத்துக்குமாரக் குருக்கள்
Pages அற்புதராணி
Birth 1982.03.14
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தனலஷ்மி, சிவயோகி சர்மா (1982.03.14) யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தைமுத்துக்குமாரக் குருக்கள்; தாய் அற்புதராணி. ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் அமெரிக்க மிசன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை அக்கராயன் மகாவித்தியாலயத்திலும் கல்வி பயின்றார் உயர்கல்வியை போர் சூழல் காரணமாக தனிப்பட்ட முறையில் படித்துப் பரீட்சையை எழுதியுள்ளார். 2011ஆம் ஆண்டு இவர் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். கவிதை, சிறுகதை பாடல் எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர் எழுத்தாளர். ஹைக்கூ புதுக்கவிதை, குறுங்கவிதை, கிராமியக்கவிதை, தன்முனைக்கவிதை என பல வகைகளிலும் கவிதைகள் எழுதி வருகிறார். வானொலியில் கவிதை நிகழ்ச்சிகளிலும் இவர் பங்குபற்றி வருகிறார். முகநூலில் பல குழுமங்களில் கவிஞராக, போட்டி நடுவராக, நிர்வாகியாக பணியாற்றுகிறார். அமரர் டொக்டர் ரகுபதி (இணுவில்) அவர்களுக்காக இவர் எழுதிய பாடல் இறுவட்டு வடிவில் வெளிவந்துள்ளது. இவரது ஹைக்கூ மற்றும் கவிதைகள் , மனம் தொடும் மலர்கள், பனிவிழும் மலர் வனம், கவிச்சோலை, அசையும் நாணல்கள், செவ்வந்தி மேலே ஒரு பனித்துளி என்பன நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. இவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பை வெகுவிரைவில் வெளியிடவுள்ளார் எழுத்தாளர்.

விருதுகள்

எழுகவி, இளங்கவி, கவிநிலா,வளர்நிலா, இசைக்கவி, கவித்தாமரை, கவிச்சிகரம், கவிச்சுடர்

குறிப்பு : மேற்படி பதிவு தனலஷ்மி, சிவயோகி சர்மா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.