ஆளுமை:தனபாலசிங்கம், முத்தையா

From நூலகம்
Name தனபாலசிங்கம்
Pages முத்தையா
Birth 1950.08.19
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தனபாலசிங்கம், முத்தையா (1950.08.19 - ) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மெல்லிசை வாத்தியக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் தனது பத்தொன்பதாவது வயதிலிருந்து கலைஞராகச் செயற்பட்டதுடன் பொங்கோ, கொங்கோ, ட்றம்ஸ் ஆகிய இசைக் கருவிகளை இசைப்பதில் ஆற்றல் பெற்றிருந்தார்.

இவர் 1971 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணத்தில் கொங்கோ, ட்றம்ஸ் வாத்திய இசைக் கருவியை முதலில் அறிமுகப்படுத்தி 1969 ஆம் ஆண்டு கில்னர் கல்லூரியின் இசைக் குழுவுடன் இணைந்து முதலில் மேடையேற்றினார். இவர் இலங்கை வானொலியில் கொங்கோ, ட்றம்ஸ் வாத்தியக் கலைஞராகவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கிய முன்னணி இசைக்குழுவான சாரங்கா இசைக்குழுவிலும் யாழ்ப்பாண மாநகர சபையிலும் பணியாற்றியுள்ளார். இவர் மில்க்வைற் கனகராசா, பிரபல இசைநாடகக் கலைஞர் அரியாலையூர் இரத்தினம் ஆகியோரால் இசைநிகழ்வுகளின் போது பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 120
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 119-120