ஆளுமை:தணிகாசலம், கணபதிப்பிள்ளை

From நூலகம்
Name தணிகாசலம்
Pages கணபதிப்பிள்ளை
Birth 1949.04.13
Place திருப்பழுகாகம், பெரியபோரதீவு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தணிகாசலம், கணபதிப்பிள்ளை (1949.04.13) திருப்பழுக்காமம் பெரியபோரதீவைச் சேர்ந்த கலைஞர். இவரின் தந்தையார் தணிகாசலம். கலைச்சுடர் தணிகா எனும் புனை பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.

கவிதை எழுதுவது, நாடகம், நாட்டுக்கூத்து நடிகராக, நாடகம், நாட்டுக்கூத்து, கிராமிய நடனம், வசந்தன் கூத்து ஆகியவற்றையும் பழக்கி மேடையேற்றியுள்ளார். இலங்கை வானொலியின் கிராம சஞ்சிகை, உதயமஞ்சரி நிகழ்ச்சிகளில் இவரது கூத்துப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

வந்தே சூறாவளி, சீ வேண்டாம் சீதனம், நரகாசூரன்வதம், கிராமத்து வீடு, புனிதாதிருமணம் என்னும் மேடை நாட்டுக் கூத்துக்களும் வசந்த காலம், கம்சன்வதம், பொய்பகர்ந்தது பூ, அகந்தை அழிந்தது எனும் நாடகங்களும் இவரின் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள். இவர் பல போட்டிகளில் கலந்துகொண்டு சான்றிழ்களையும் பரிசில்களையும் பெற்றுள்ளார்.

விருதுகள்

கலைச்சுடர்