ஆளுமை:ஜெஸீமா இஸ்மாயில், எம்.ரி.எஸ்.அகமத்

From நூலகம்
Name ஜெஸீமா இஸ்மாயில்
Pages எம்.ரி.எஸ்.அகமத்
Pages பரீனா
Birth 1935.09.21
Place சாய்ந்தமருது
Category சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெஸீமா இஸ்மாயில், எம்.ரி.எஸ்.அகமத் (1935.09.21 - ) சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவரது தந்தை என்.ரி.எஸ்.அகமத்; தாய் பரீனா. இவர் ஆரம்ப வகுப்பிலிருந்து கல்லூரிப் படிப்பு வரை கொழும்பு சென். பிரிட்ஜட்ஸ் கல்லூரியில் பயின்றார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பீ. ஏ. பட்டத்தையும் மாக்கில் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் சிட்னி பல்கலைக்கழகத்தில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றார். 32 வருட ஆசிரிய சேவையில் 13 வருடங்கள் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றினார்.

இலங்கைத் தேசிய ஆணைக்குழுத் தலைவர், திறந்த பல்கலைக்கழகத்தின் ஆளுநர் பேரவை உறுப்பினர், இலங்கை அபிவிருத்தி ஆய்வுக்கான மார்கா நிறுவனத்தின் ஆளுநர், மஹாபொல உயர்கல்விப் புலமைப்பரிசில் உதவித் தர்ம நிதியத்தின் அறங்காவல் குழு உறுப்பினர், தேசியக் கல்வி நிறுவனத்தின் புலமை விவகாரக் குழு உறுப்பினர், களனிப்பல்கலைக்கழக நுண்கலைப்பீட நிர்வாக சபை உறுப்பினர், இலங்கை கல்வி மேம்பாட்டுக் கழகத் தலைவர், வெளிநாட்டுப் பட்டதாரிகள் இலங்கையில் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகளுக்கும் கற்கைக்குமான ஆலோசகர், அவற்றின் மேற்பார்வையாளர், பாடவிதானம் மற்றும் போதனைகளுக்கான உலகப் பேரவை உறுப்பினரெனப் பொறுப்புக்களை ஏற்றுக் கல்வி மேம்பாட்டிற்குப் பணியாற்றி வரும் இவர் ஐ.நா.சபையின் கல்வி, விஞ்ஞானக் கலாச்சார அமைப்பின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் எழுதியுள்ள கல்வி, பெண்கள், சிறார்கள், மனித உரிமைகள், இஸ்லாம், தலமைத்துவப்பண்பு, இளைஞர் விவகாரம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் ஆழமும் அர்த்தமும் கொண்டவை. இவருக்கு ஜனாதிபதி தேசபந்து விருது, சிறந்த கல்வியாளருக்கான லயன் கழக விருது, கல்விச் சாதனையாளருக்கான சொன்டா பெண்கள் அமைப்பின் விருது என்பன கிடைக்கப் பெற்றுள்ளன.

Resources

  • நூலக எண்: 1950 பக்கங்கள் 26-32