ஆளுமை:ஜெயலஷ்மி சந்திரசேகர்

From நூலகம்
Name ஜெயலஷ்மி
Pages பொன்னையா
Pages அன்னபூரணம்
Birth 1957.09.01
Place மாத்தளை
Category ஊடகவியலாளர்

ஜெயலஷ்மி, சந்திரசேகர் (1957.09.01) ஊடகவியலாளர் மாத்தளையில் பிறந்தவர். இவரது தந்தை பொன்னையா; தாய் அன்னபூரணம். மாத்தளை தேசிய கல்லூரியான பாக்கியம் மகாவித்தியாலயம் மற்றும் நாவலப்பிட்டி அன்ரூஸ் பாலிகா மகாவித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார். ஊடகவியலாளர் ஜெயலஷ்மி யாழ் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் கலைமணி பட்டத்தை 1982ஆம் ஆண்டு பெற்றார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளர், செய்திவாசிப்பாளர், மெல்லிசைப்பாடகி என தனது பன்முகத்திறமைகளையும் வெளிப்படுத்தியவர். இலங்கை கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு, ஆசிய சேவை, தென்றல் ஆகிய சேவைகளில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் 23 வருடங்களாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியுள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு ஜெயலஷ்மி, சந்திரசேகரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.


வெளி இணைப்புக்கள்