ஆளுமை:ஜெயலட்சுமி, இராமநாதன்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:30, 11 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்= ஜெயலட்சுமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயலட்சுமி
தந்தை இராமநாதன்
தாய் வள்ளிப்பிள்ளை
பிறப்பு 1971.08.30
ஊர் முழங்காவில்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமதி. ஜெயலட்சுமி கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவிலில் பிறந்தார்.(1971.08.30). இவர் தனது ஆரம்பக் கல்வியை தரம் 5 வரை கிளி/முழங்காவில் மகா வித்தியாலயத்திலும், தரம் 6 இலிருந்து உயர் தரம் வரை யாழ்/இராமநாதன் கல்லூரியிலும் பயின்றார். 1986 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரத்தினையும், 1989 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரத்தினையும் சித்தி பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு வணிகமாணி பட்டதாரியானார். 2001 ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும், 2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகல்விமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவரது தந்தையார் பாரம்பரிய கிராமமான வேரவிலைச் சேர்ந்த வர்த்தகர். இவரது கணவனின் பெயர் இராமநாதன், இவரது மகனின் பெயர் கபில்முகிலன் ஆகும். இவர் 1999 ஆம் ஆண்டு கிளி/முழங்காவில் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகக் கடமையேற்றார். 2005 ஆம் ஆண்டு கிளி/ நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் கடமை நிறைவேற்று அதிபராகப் பொறுப்பேற்றார். 2007 ஆம் ஆண்டு தமிழ்ச்சோலை வித்தியாலயத்தின் அதிபராகவும், 2011 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை (2023) கிளி/விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபராக இருந்து வருகின்றார்.