ஆளுமை:ஜெயலக்சுமி, இராசநாயகம்

From நூலகம்
Name ஜெயலக்சுமி
Pages மார்க்கண்டு
Pages மகேஸ்வரி
Birth
Place பருத்தித்துறை வியாபாரிமூலை
Category கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயலக்சுமி, இராசநாயகம் யாழ்ப்பாணத்தில் பருத்தித்றையில் வியாபாரிமூலையில் பிறந்த கல்வியாளர். இவரது தந்தை மார்க்கண்டு; தாய் மகேஸ்வரி. ஆரம்பக்கல்வி மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் இடைநிலை உயர்க்கல்வி பருத்துத்துறை வட இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கல்வியியல்துறையின் தலைவராகவும் தற்பொழுது கடமையாற்றி வருகிறார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி சிறப்புப்பட்டம், பட்டப்பின் கல்வி டிப்ளோமா, கல்வி முதுமாணி (கல்வியியல்) போன்ற வற்றையும் , கலாநிதிப் பட்டத்தை இந்தியாவில் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். 22 வருடமாக பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி வரும் ஜெயலக்சுமி. கல்வியியல் முதுமாணி இணைப்பாளராக ஏழு வருடம் கடமையாற்றியுள்ளார். இவர் ஆசிரியராக கிளிநொச்சியில் நியமனம் பெற்று பின்னர் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கடமையாற்றியுள்ளார். 1996ஆம் ஆண்டு விரிவுரையாளராக யாழ் பல்கலைக்ழகத்தில் இணைந்து கொண்டார்.

நினைவுப் பேருரைகளை ஆற்றிவரும் இவர் கல்வியியல்துறை சார் 11 நூல்களையும் எழுதியுள்ளார். சர்வதேச மட்டத்தில் 37 கட்டுரைகள், தேசிய மட்டத்திலும் உள்ளுர் மட்டத்திலும் நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். சமுதாயக்கல்வி, கல்வியின் சமூகவியல், கல்வித்தத்துவம், நவீன முறையில் மொழி கற்பித்தல், வரலாற்று பதிவுகள், வறுமை தணிப்பும் கல்வியும், கல்வியியல் கட்டுரைகள், பொதுநிதி அலுவலக முகாமைத்துவம் (கணவருடன் இணைந்து) எழுதியுள்ளார்.

இலங்கை திறந்த பல்கலைகழகம், தேசிய கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி ஆகியவற்றிலும் விரிவுரைகளை மேற்கொள்கிறார். யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராகவுள்ளார்.

விருதுகள் இந்து நாகரீகத்துறையில் கல்வி முதுமாணிக்காக லேடி இராமநாதன் நினைவு விருது.

குறிப்பு : மேற்படி பதிவு ஜெயலக்சுமி, இராசநாயகம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

Resources

  • நூலக எண்: 10739 பக்கங்கள் 20-21