"ஆளுமை:ஜெயகௌரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(" {{ஆளுமை| பெயர்=ஜெயகௌரி| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

02:35, 16 டிசம்பர் 2022 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜெயகௌரி
தந்தை அப்புக்குட்டி
தாய் கல்யாணி
பிறப்பு
ஊர் தெமட்டகொடை
வகை நடிகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயகௌரி () கொழும்பு தெமட்டகொடையைச் சேர்ந்த நடிகை. இவரது தந்தை அப்புக்குட்டி; தாய் கல்யாணி. தெமட்டகொடை மாளிகாகந்தை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் கொழும்பு கப்பித்தாவத்தை தொண்டர் பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்தார். பாடசாலை நாட்களிலேயே நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1957 ஆம் ஆண்டில் பஞ்சிகாவத்தையில் கவின்கலை மன்றத்தின் சார்பில் மேடையேறிய நூதன லஞ்சம் என்ற நாடகத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பொரளை வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் கவின் கலை மன்றம் அரங்கேற்றிய "எழுத்தாளனின் காதலி" நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வரணியூரான் எழுதிய சங்கிலியன் நாடகத்தில் தினக்குரல் அதிபர் எஸ். பி. சாமியோடு இணைந்து நடித்தார். ஜெயகௌரி இலங்கைத் தமிழ் நாடக, மற்றும் திரைப்பட நடிகை ஆவார். சமுதாயம் என்ற இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். ஐநூறுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார் வி. கே. டி. பாலனுடன் "பேசும் விழிகள்", எஸ். எஸ். சந்திரனுடன் தீச்சுடர், கம்பளைதாசனுடன் விளக்கேற்றி வைத்தவள், மேலும், லடிஸ் வீரமணி தயாரித்த வண்டரித்த மலர் போன்ற பல நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கலைவாணர் நாடக மன்றம், தமிழ் முன்னேற்ற மன்றம், மனோரஞ்சித நாடக சபா மேடை நாடகங்களிலும், சானா, வாசகர் ஆகியோரின் வானொலி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். காதலுக்கு என்ன விலை என்ற தொலைக்காட்சி நாடகத்தில் பிரபா கணேசனுக்கு மாமியாராக நடித்தார். திரைப்படத்தில் ஹென்றி சந்திரவன்ச தயாரிப்பில் 1952 இல் வெளியான சமுதாயம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவருடன் கதாநாயகனாக நடித்தவர் எஸ். என். தனரெத்தினம். 16 மிமீ அகலத்தில் வெளிவந்த இத்திரைப்படம் டெக்னிக் வண்ணத்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் கொழும்பில் ஒரு வாரம் மட்டுமே ஓடியிருந்தாலும், தமிழ்ப் பகுதிகளில் ஓரளவு வெற்றிகரமாக ஓடியது. ஜெயகௌரி நடித்த ஒரேயொரு திரைப்படம் சமுதாயம் ஆகும். விருதுகள். இலங்கை அரசின் "கலாபூசணம்" விருது மானாவின் தோட்டத்து ராணி நாடகத்தில் சிறந்த துணை நடிகை 1994ல் அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் நடத்திய நாடக விழாவில் ஊமைகள் உறங்குவதில்லை என்ற நாடகத்தில் சிறப்பாக நடித்தமைக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பாராட்டு சான்றிதழ் 1996 இல் வினோதன் ஞாபகார்த்தமாக கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேற்றப்பட்ட பாட்டுக்கொரு புலவன் நாடகத்தில் நடித்தமைக்காக கெளரவ விருது

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜெயகௌரி&oldid=546835" இருந்து மீள்விக்கப்பட்டது