ஆளுமை:ஜெனீரா, தௌபீக் ஹைருன் அமான்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:39, 5 மார்ச் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜெனீரா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெனீரா
தந்தை தௌபீக்
தாய் அபீபா உம்மா
பிறப்பு 1967.05.16
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர், கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெனீரா, தௌபீக் ஹைருன் அமான் (1967.05.16) திருகோணமலை, கிண்ணியாவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை தௌபீக்; தாய் அபீபா உம்மா. ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். இதே பாடசாலையில் தொடர்ந்து ஆசியர் பணியாற்றினார். திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் இலக்கியம் படைத்த முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் ஜெனீரா ஹைருல் அமான். தனது ஏழாவது வயதிலேயே இவரின் தந்தையின் ஊக்கம் காரணமாக எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார். இவரின் முதலாவது ஆக்கம் ”எனது பொழுதுபோக்கு” என்ற தலைப்பில் தினகரன் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும். பாடசாலைக் காலத்திலேயே கவிதை, கட்டுரை போன்றவற்றில் ஈடுபாடுகொண்டவராகக் காணப்பட்டார். 1991ஆம் ஆண்டு அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெறும் காலத்தில் ”பாலர் பாடல்” எனும் சிறுவர் இலக்கிய நூலை வெளியிட்டுள்ளார். சிறுவர் இலக்கியம் பாலர் பாடல் 1991 சின்னக்குயில் பாட்டு 2009 ”பிரியமான சினேகிதி” சிறுகதைத் தொகுதி 2009 மிதுகாவின் நந்தவனம் 2010 கட்டுரை எழுதுவோம் 2010

விருதுகள் திருகோணமலை நூலக சபை விருது கிண்ணியா பிரதேச செயலகம் இலக்கியத் தாரகை விருது கிழக்கு மாகாண சாஹித்திய விருது – சிறுவர் இலக்கியம்