ஆளுமை:சோதிநாதன், நாகலிங்கம்

From நூலகம்
Name சோதிநாதன்
Pages நாகலிங்கம்
Pages பொன்னம்மா
Birth 1938.04.25
Pages -
Place சண்டிலிப்பாய்,
Category ஆசிரியசேவை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
Sothinathan.jpg

நாகலிங்கம் சோதிநாதன் (1938.04.25 -) சண்டிலிப்பாய்,யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த. கொத்தணி அதிபர் இவரது தந்தை நாகலிங்கம்; தாய் பொன்னம்மா. இவர் தனது கல்வியை ஸ்கந்தவரோதயா கல்லூரியில் ஆங்கில மொழியில் பயின்றார். 1958 ல் கிளிநொச்சி கனகபுரம் எனும் ஊரில் குடியேறி வசித்து வருகிறார். மேட்டுநிலப்பயிர்ச்செய்கையிலும், கோழி வளர்ப்பிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரமானம் ஈட்டி வந்தார்.

1964 ல் பரந்தன் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றார். 1966ல் நல்லூரில் உள்ள ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். முரசுமோட்டை முருகானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். 1987ல் கொத்தணி அதிபராகவும் கடமையாற்றினார்.

இவர் யோகர் சுவாமியின் சிந்தனையில் கிளி.கனகாம்பிகை அம்மன் ஆலய உருவாக்கத்திற்கும் ஒத்துழைத்தவர் . கிளி.மக்கள் அமைப்பினால் ‘மண்ணின் மைந்தன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்