ஆளுமை:சேகுமதாறு சாகிப் புலவர், மீரான்குட்டி

From நூலகம்
Name சேகுமதாறு சாகிப் புலவர்
Pages மீரான்குட்டி
Birth
Place அக்கரைப்பற்று
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சேகுமதாறு சாகிப் புலவர், மீரான்குட்டி அக்கரைப்பற்றைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மீரான்குட்டி. இவர் இளமையில் சில்லறை வாணிகத்தில் ஈடுபட்டுக் கால மாற்றத்தில் குர் ஆன் முதலான நூல் வியாபாரத்தில் ஈடுபட்டார். இத்தொழில் இவரைக் கலை வளர்ச்சியில் வழிப்படுத்திய போதும் கண்பார்வை இழந்த நிலையில் மனம் வருந்தி ஆண்டவன் மீது பல வேண்டுதற் செய்யுள்களைப் பாடினார். இவரது பாடல்கள் 'இறைவன் பேரில் வேண்டல்', 'முகையதீன் ஆண்டகை மீது வேண்டல்' முதலாக பல தலைப்புக்களிற் தொகுக்கப்பட்டுப் 'பல பாமாலை' என்ற நூலாக அச்சேறியது. இவர் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 43
  • நூலக எண்: 2469 பக்கங்கள் 281-286
  • நூலக எண்: 963 பக்கங்கள் 141