ஆளுமை:சுமதி, குகதாசன்

From நூலகம்
Name சுமதி
Pages கார்த்திகேசு
Pages வாலாம்பிகை
Birth 06.08.1963
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுமதி குகதாசன் (1963.08.06) யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையில் பிறந்தவர். இவரது தந்தை கார்த்திகேசு; தாய் வாலாம்பிகை. வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி கற்றார். பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் போது ஈழநாடு பத்திரிகையில் இவர் எழுதிய சிறுகதை பிரசுரிக்கப்பட்டமையே எழுத்துலக பிரவேசத்திற்கு காரணமாக இருந்தது எனத் தெரிவிக்கிறார் எழுத்தாளர் சுமதி குகதாசன். கவிதைத்துறையில் மிகவும் ஈடுபாடுடைய எழுத்தாளர் கவிதைத்துறையில் தனது ஆர்வம் தற்செயலாக நடந்தது எனத் தெரிவிக்கிறார். கொழும்பில் தற்பொழுது வசித்து வரும் சுமதி குகதாசன் ஒய்வு பெற்ற ஆசிரியராவார். ”தளிர்களின் சுமைகள் ”, ”எதனை வேண்டுவோம்” ஆகிய இரு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவர் பிரகாசம் என்னும் சஞ்சிகையின் ஆசிரியருமாவார். கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அறக்கட்டளை நிதியத்தின் செயலாளராகவும் இருந்து பல சேவைகைளை ஆற்றி வருகின்றார்.

படைப்புகள்

  • தளிர்களின் சுமைகள் (கவிதைத் தொகுதி)
  • எதனை வேண்டுவோம் (கவிதைத் தொகுதி)


குறிப்பு : மேற்படி பதிவு சுமதி குகதாசன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

Resources

  • நூலக எண்: 10112 பக்கங்கள்
  • நூலக எண்: 34875 பக்கங்கள்