ஆளுமை:சிவானந்த சர்மா, ப.

From நூலகம்
Name சிவானந்த சர்மா
Pages பஞ்சாட்சர சர்மா
Birth 1954.01.08
Place யாப்பாணம், கோப்பாய்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவானந்த சர்மா, ப (1954.01.08) யாழ்ப்பாணம் கந்தசாமி கோவிலடி, கோப்பாய் வடக்கு, கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். சிறுப்பிட்டி இவரது தந்தை பஞ்சாட்சர சர்மா; வேதம் பயின்றுள்ள இவர் தந்தையாரிடமும் பின்னர் பல்கலைக்கழகத்திலும் சமஸ்கிருத இலக்கண இலக்கியங்கள் கற்று நீர்வேலி சுவாமிநாத இராஜேந்திரக் குருக்களிடம் ஆகமங்கள் பயின்றவர். இவர் படவரைஞராக அரச சேவையில் பணி ஆற்றி ஓய்வு பெற்றார். கோப்பாய் சிவம் என்ற புனை பெயரில் எழுதி வருகிறார்.

சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், வானொலி நாடகம், உரைச்சித்திரம், மெல்லிசை, கீர்த்தனைகள் , சமயம் சார்ந்த கட்டுரைகள் எழுதி பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். சமய பிரசங்கங்கள், இலக்கியச் சொற்பொழிவுகள், பட்டி மன்றங்கள் பலவற்றிலும் பங்குபற்றி உள்ளதுடன் பேச்சளாருமாவார். இலண்டன், நோர்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தன் பேச்சாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் ஆக்கங்கள் பல போட்டிகளில் பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளன.

69 சமய, இலக்கிய நூல்களையும் 21 ஊஞ்சற் பாடல்களையும் வெளியிட்டுள்ளார். அறநெறி அமுதம் எனும் சஞ்சிகையின் ஆசிரியருமாவார்.

விருதுகள்

ஸ்ரீ சுமஸ்வரம் சாதனையாளர் விருது சர்வதேச இந்துமத குருபீடத்தினால் 2012.

அறஸ்சதுரர் விருது கொழும்பு ராமகான சபா – 2011.

கலாபூஷணம்

சிவானந்த சர்மா, ப.

Resources

  • நூலக எண்: 76254 பக்கங்கள் 54

படைப்புகள்