ஆளுமை:சிவநாயகி, தியாகராசா

From நூலகம்
Name சிவநாயகி, தியாகராசா
Pages தம்பையாப்பிள்ளை
Pages பவளநாயகி
Birth 1904.08.03
Place தெல்லிப்பளை
Category சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவநாயகி, தியாகராசா (1904.08.03 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த சமயப் பெரியார். இவரது தந்தை தம்பையாப்பிள்ளை; இவரது தாய் பவளநாயகி. இவர் தனது தந்தை தம்பையாப்பிள்ளையிடம் அரிச்சுவடியையும் ஆரம்பக்கல்வியையும் கற்றுப் பின்னர் இராமநாதன் பெண்கள் கல்லூரியில் கற்றார்.

இவர் சமய நூல்கள் பலவற்றை வெளியிட்டார். இவரது கன்னிப்படைப்பாகக் "காரைக்காலம்மையார்" என்ற நூல் வெளியிடப்பட்டது. இவர் 1948, 1981 ஆகிய ஆண்டுகளில் சென்னை சைவசித்தாந்த சமாஜம் நடாத்திய மகாநாடுகளில் கலந்து உரையாற்றியுள்ளார். இவர் பாடிய தில்லைக்கூத்தன் பக்திப்பாமாலை என்ற நூல் அறிஞர்கள் பலரால் பாராட்டப்பட்டது. இவர் 'பத்திமை மாமணி' என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4413 பக்கங்கள் 38-44